டிசம்பர் 17, டெல்லி (New Delhi): நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரானது (Parliament Winter Session) நவம்பர் 25ம் தேதி தொடங்கி, வரும் டிசம்பர் 20ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த கூட்டத்தொடரில் 16 மசோதாக்கள் நிறைவேற்றப்படலாம் எனவும், 5 மசோதாக்கள் புதிதாக அறிமுகம் செய்யப்படலாம் எனவும் தெரியவருகிறது. இந்திய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா உட்பட முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படலாம்.
குளிர்கால கூட்டம் தொடங்கியது முதலே, எதிர்க்கட்சியினர் அதானி விவகாரம், மணிப்பூர் கலவரம் போன்ற பல்வேறு விஷயங்களை முன்வைத்து முழக்கம் எழுப்பி வருகின்றனர். ஆனால் கூட்டத்தொடர் தொடங்கியதிலிருந்து மத்திய அமைச்சர்கள் அதானி விவகாரம் குறித்து விவாதிக்க தயங்குகின்றனா். இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கூச்சல், குழப்பம் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் (One Nation One Election) மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மத்திய சட்டத் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் (Law Minister Arjun Ram Meghwal) தாக்கல் செய்தார். இந்த ஒப்புதலுக்கு பலர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். Students Dies By Suicide: தேர்வு தோல்வியால் மாணவர் விவரீத முடிவு.. துடிதுடித்துப்போன குடும்பத்தினர்..!
இந்த மசோதாவைத் திரும்பப் பெற வலியுறுத்தி காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துப் பேசி வருகின்றனர். நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது தான் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் (One Nation One Election) ஆகும். இது தொடர்பாக முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு ஒன்று அமைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. அந்தக் குழுவின் பரிந்துரைகளுக்கு மத்திய அமைச்சரவை செப்டம்பர் 18 ஒப்புதல் அளித்தது.
ஒரே நாடு ஒரே தேர்தல்: இத்திட்டத்தின் கீழ் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் மக்களவை மற்றும் மாநில சட்டமன்றத் தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்படும். இந்தத் திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க முடியும். முதல் கட்ட தேர்தல் முடிந்த 100 நாட்களுக்குள் பஞ்சாயத்து மற்றும் நகராட்சி அமைப்புகளுக்கான உள்ளாட்சி தேர்தல்களும் நடத்தப்படும். இதன் மூலம் உள்ளூர் அரசியலமைப்புகளும் ஒரே நேரத்தில் புதுப்பிக்க முடியும். இந்தத் திட்டத்தின் மூலம் தேர்தல் காலத்தில் நாடு முழுவதும் விரிவான பிரச்சாரங்கள் நடத்தப்படும். இந்த முறையை செயல்படுத்தினால் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் மூன்று மாத காலம் மட்டுமே தேர்தல் காலமாக இருக்கும். தேர்தலில் செலவுகள் குறையும். வாக்குப்பதிவு அதிகரிக்கும், வேட்பாளர்கள் கறுப்புப் பணத்தையும் ஊழல் பணத்தையும் தேர்தலுக்குப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த முடியும்.
வரலாறு: 1951-52 ஆம் ஆண்டில் நடந்த முதல் பொதுத் தேர்தலின் போது, ஒரே நேரத்தில் நாடு முழுவதும் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட்டது, 1967 வரை இந்த நடைமுறை தொடர்ந்தது. அதன்பிறகு தொடர்ந்து மக்களவை மற்றும் சட்டமன்றங்கள் முன்கூட்டியே கலைக்கப்பட்டதால், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் முறை கலைந்தது. 1983-ம் ஆண்டிலும் , 1999-ம் ஆண்டிலும் மீண்டும் பழைய நடைமுறைக்குத் திரும்புவதற்கான சாத்தியங்கள் பரிசீலிக்கப்பட்டன. Road Accident: லாரி மீது பேருந்து மோதி விபத்து; 6 பேர் பலி.. 10 பேர் படுகாயம்..!
பாதகங்கள்: இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதினால் சில மாநிலங்களில் சட்டமன்ற பதவிக்காலத்தை குறைக்கவும் சில மாநிலங்களில் நீட்டிக்கவும் வேண்டி இருக்கும். இதற்காக மக்கள் பிரதிநிதித்துவ சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளின் கருத்து ஒற்றுமை வேண்டும். இந்தத் திட்டத்தினை அவசரமாக செயல்படுத்துவதன் மூலம் மாநில மற்றும் மத்தியில் செயல்படும் அரசியல் கட்சிகளுக்கு இடையிலான மோதல்கள் அதிகரிக்கவும் பிரிவினைவாத சக்திகள் வலுவடைவதையும் காணக்கூடும். எனவே அனைத்து சாதக பாதங்களையும் ஆராய்ந்து அனைத்து அரசியல் கட்சிகளின் கருத்து ஒற்றுமையுடன் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதே சிறந்த முடிவாக இருக்கும்.