Nithya Sri | Death File Pic (Photo Credit: @ThanthiTV X / Pixabay)

டிசம்பர் 16, சத்துவாச்சாரி (Vellore News): வேலூர் மாவட்டத்தில் உள்ள அலமேலுமங்காபுரம் பகுதியில் வசித்து வருபவர் நந்தகுமார். இவரின் மனைவி நித்ய ஸ்ரீ. தம்பதிகளுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று முடிந்தது. அதனைத்தொடர்ந்து, இருவருக்கும் 3 வயதுடைய யோகேஸ்வரன் என்ற குழந்தை பிறந்துள்ளது.

சடலமாக தாய்-மகன் மீட்பு:

தம்பதிகள் இடையே கடந்த சில மாதமாகவே குடும்ப தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவ்வப்போது கணவன் - மனைவி சண்டை நடந்து வந்துள்ளது. இந்த விஷயம் உறவினர்களுக்கும் தெரியும் என கூறப்படுகிறது. இதனிடையே, இன்று நித்யஸ்ரீ, யோகேஸ்வரன் ஆகியோர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டனர்.

கணவருக்கு தர்ம அடி:

இந்த விஷயம் தொடர்பாக நித்யஸ்ரீ உறவினர்களுக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் சொல்லியுள்ளனர். இதனைக்கேட்டு ஆத்திரமடைந்து விரைந்த நித்யஸ்ரீ உறவினர்கள், வீட்டிற்கு வந்து நந்தகுமாரை அடித்து நொறுக்கினர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், காயத்துடன் இருந்த நந்தகுமாரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். கள்ளக்காதலுக்கு மாமியார் இடையூறு.. தோழி, கள்ளக்காதலனுடன் சேர்ந்து மருமகள் வெறிச்செயல்.. விசாரணையில் பகீர் திருப்பம்.! 

காதல் திருமணம்:

மேலும், சடலமாக மீட்கப்பட்ட நித்ய ஸ்ரீ, யோகேஸ்வரன் ஆகியோரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தம்பதிகளான நித்ய ஸ்ரீ - நந்தகுமார் காதலித்து 2019ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டுள்ளார்.

கழுத்தில் காயம்:

திருமணத்திற்கு பின்னர் 3 குழந்தைகள் பிறந்த நிலையில், முதல் 2 குழந்தைகள் அடுத்தடுத்து உடல்நலக்குறைவால் உயிரிழந்தனர். இதன் பின்னரே மூன்றாவதாக யோகேஸ்வரன் என்ற குழந்தை பிறந்து இருக்கிறது. நித்யஸ்ரீயின் கழுத்தில் காயம் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இதனால் கொலையா? தற்கொலையா? என விசாரணை தொடருகிறது.

தாய்-மகள் மரணத்தின்போது நந்தகுமாரும் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் அவர் மனைவியை கொன்று நாடகமாடுகிறாரா? எனவும் விசாரணை தொடருகிறது. காதல் திருமணம் செய்துகொண்ட பெண்மணி, அவரின் மகன் மர்ம மரணம் அடைந்துள்ள விவகாரம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள்:

சைல்டுலைன் இந்தியா - 1098; பெண்கள் உதவி எண் - 181; தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112; வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 78271 70170; போலீஸ் பெண்கள் / மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091 / 1291; காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் குறித்து புகார் அளிக்க - 1094. ஆன்லைன் வழியாக பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?3