Affair & Murder File Pic (Photo Credit: Pixabay)

டிசம்பர் 16, கந்திலி (Tirupattur News): திருப்பத்தூர் (Tirupattur) மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் வசித்து வரும் 28 வயது இளம்பெண்ணுக்கு, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்று முடிந்தது. இவருக்கு தற்போது வரை குழந்தைகளில். பெண்ணின் கணவர் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் தங்கியிருந்து, கட்டிட வேலைகளை செய்து வந்துள்ளார். மாதம் ஒருமுறை விடுமுறை எடுத்து வீட்டிற்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

அரைநிர்வாணமாக இளம்பெண் சடலம்:

இதனால் வீட்டில் தனியாக வசித்து வந்த இளம்பெண், மகளிர் சுயஉதவி குழுக்களிடம் கடனும் வாங்கி இருக்கிறார். கடந்த டிச.11 அன்று கடன் தொகையை வசூல் செய்ய, மகளிர் சுயஉதவி குழுவினர் வந்துள்ளனர். அச்சமயம் வீட்டின் கதவு திறந்து கிடைக்க, பலமுறை அழைத்துப் பார்த்தவர்கள், வீட்டிற்குள் சென்றுள்ளனர். அப்போது, இளம்பெண் அரை நிர்வாண நிலையில் சடலமாக கிடந்துள்ளார். Vellore News: 3 வயது மகனுடன் தாய் மர்ம மரணம்; காதல் திருமணம் நடந்த 5 ஆண்டுகளில் அதிர்ச்சி.. கணவருக்கு தர்ம அடி.! 

காவல்துறையினர் விசாரணை:

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த நபர்கள், கந்திலி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரின் செல்போனும் கைப்பற்றப்பட்டு சோதனை செய்யப்பட்டதில், அவரின் செல்போனில் இருந்து 2 எண்களுக்கு அவ்வப்போது அழைப்பு சென்றது தெரியவந்தது.

கள்ளக்காதல் பழக்கம்:

இதனால் சந்தேகத்தின் பேரில், அதே பகுதியில் வசித்து வரும் குமரேசன் (வயது 26), விக்னேஷ் (வயது 25) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்த விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல் அம்பலமானது. அதாவது, கொலையான இளம்பெண்ணிற்கும், குமரேசனுக்கும் கடந்த 7 ஆண்டுகளாகவே கள்ளக்காதல் பழக்கம் இருந்தது தெரியவந்தது. பெண்ணின் கணவர் மாதம் ஒருமுறை மட்டுமே வீட்டிற்கு வந்து செல்வார்.

புதிய கள்ளக்காதலன்:

இதனை தனக்கு சாதகமாக்கிய கள்ளக்காதல் ஜோடி, அவ்வப்போது தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளது. குமரேசன் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் சிங்கப்பூர் சென்றுவிடவே, விக்னேஷ் என்ற நபருடன் இளம்பெண் பழக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இருசக்கர வகணத்திலும் ஊரைச் சுற்றி இருக்கின்றனர். வானிலை: அடுத்த ஒரு வாரத்திற்கு வெளுத்துக்கட்டப்போகும் பேய் மழை; அறிவிப்பு வெளியிட்ட வானிலை ஆய்வு மையம்.! 

உல்லாசத்திற்கு அழைப்பு:

இதனிடையே, சில வாரங்களுக்கு முன்னதாக குமரேசன் ஊர் திரும்பவே, கள்ளக்காதலி - விக்னேஷ் இடையே ஏற்பட்ட பழக்கத்தை அறிந்துகொண்டுள்ளார். இதனால் கள்ளக்காதலி மீது வெறுப்புக்கொண்டு, கடந்த டிச.10 அன்று குமரேசன் தனது கள்ளக்காதலி வீட்டிற்கு நேரில் சென்றுள்ளார். அங்கு தனிமையில் இருக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விசயத்திற்கு இளம்பெண் மறுத்து இருக்கிறார்.

உல்லாசத்துக்காக அடுத்தடுத்து கொடுமை:

இதனால் ஆத்திரமடைந்த குமரேசன், "விக்னேஷ் - உனக்கு இடையே இருக்கும் பழக்கம் எனக்கு தெரியும். அதனால்தான் என்னை தவிர்க்கிறாயா?" என வாக்குவாதம் செய்துள்ளார். ஒருகட்டத்தில் ஆத்திரத்தில் சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால் மயங்கி சரிந்த இளம்பெண்ணுடன், குமரேசன் உடலுறவு மேற்கொண்டு இருக்கிறார். இதன்பின் குமரேசன் அங்கிருந்து சென்றுவிட்டார். சிறிது நேரம் கழித்து நள்ளிரவில் விக்னேஷ் வீட்டிற்கு வருகை தந்துள்ளார்.

மூச்சுத்திணறி பறிபோன உயிர்:

விக்னேஷும் உல்லாசத்திற்கு அழைப்புவிட, உடல்நிலை சரியில்லை என இளம்பெண் மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விக்னேஷும் நிலைமை தெரியாமல் இளம்பெண்ணை சரமாரியாக தாக்கி, அவருடன் உல்லாசமாக இருந்துவிட்டுச் சென்றுள்ளார். இதனால் ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக அவதிப்பட்ட இளம்பெண், பரிதாபமாக உயிரிழந்தார். விக்னேஷின் அணுகுமுறை காரணமாக அவர் மூச்சுத்திணறி உயிரிழந்து இருக்கிறார்.

இருவரும் கைது:

பின் குமரேசன், விக்னேஷ் இருவரும் எதுவும் தெரியாததுபோல் தலைமறைவாகிய நிலையில், காவல்துறையினர் இருவரையும் கைது செய்து உண்மையை அறிந்தனர். அதனைத்தொடர்ந்து, இருவரும் நீதிபதி முன் சமர்ப்பிக்கப்பட்டு, வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.