Vitamin D (Photo Credit: Pixabay)

டிசம்பர் 18, சென்னை (Health News): மனித உடலின் இயக்கத்திற்கு பல்வேறு விதமான ஊட்டச்சத்துக்கள், தாதுச்சத்துக்கள், வைட்டமின்கள் தேவைப்படுகின்றன. இவை நமது உடலை சீராக இயங்க வழிவகை செய்வதோடு மட்டுமல்லாது, உடலின் வளர்ச்சிக்கும், நோயெதிர்ப்பு சக்திக்கும் உதவி புரிகிறது. உடலில் இருக்கும் வைட்டமின் டி அளவு மாறுபடும் பட்சத்தில், அவை எலும்புகளை வலுவிழக்க வழிவகை செய்யும். இதனால் வயதான நபர்களுக்கு எலும்புகள் சார்ந்த பிரச்சனையும் ஏற்படும். Avarakkai Poriyal Recipe: அவரைக்காய் பொரியல் சுவையாக செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!

வைட்டமின் டி குறைபாடு அறிகுறிகள்:

நமது உடலில் வைட்டமின் டி குறையும் பட்சத்தில் அதிக உடல் சோர்வு, வேலையில் கவனம் இல்லாதது, சுறுசுறுப்புடன் வேலை செய்ய இயலாதது, சாதாரணமாக கீழே விழ நேர்ந்தாலும் எலும்பு முறிவு ஏற்படுவது போன்றவை ஏற்படும். பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி முடிவுறும் மெனோபாஸ் காலகட்டத்தில், எலும்பு தேய்மானம் ஏற்படும். இதன் அறிகுறியாகவும் வைட்டமின் டி குறைபாடு இருக்கும். Tips for Women: வெளியூரில் தனியாக வசிக்கும் பெண்களா நீங்கள்? உங்களுக்கான அசத்தல் டிப்ஸ் இதோ.! 

சில காரணங்கள்:

சூரிய ஒளி இல்லாத அல்லது குறைவாக கிடைக்கும் இடங்களில் அதிக நேரம் வேலை செய்தல், அளவுக்கதிகமாக சன்ஸ்கிரீன் பயன்படுத்துதல், அதிக மெலனின் உற்பத்தி கொண்டவர்களுக்கு வைட்டமின் டி குறைபாடு என்பது ஏற்படும். அதேபோல, உயரமான கட்டிடத்தில், சூரிய ஒளி கிடைக்காத இடத்தில அதிக நேரம் இருந்தாலும் வைட்டமின் டி குறைபாடு ஏற்படும். நமது உடலில் வைட்டமின் டி இருக்கும் பட்சத்திலேயே எலும்புகளின் ஆரோக்கியம் அதிகரிக்கும், நோயெதிர்ப்பு சக்தி பெருகும். காளான், இறால், ஆரஞ்சு பழசாறு, பால், தானியம், தயிர் போன்ற உணவுகளிலும் வைட்டமின் டி இருக்கிறது.

குறிப்பு: மேற்கூறிய அறிகுறிகள் பொதுவானவையே. சந்தேகம் அல்லது உடல்நலக்குறைவு இருப்பின், மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்று, உடல்நலப்பரிசோதனைக்கு பின்னர், மருத்துவரின் அறிவுரையை ஏற்று செயல்படுவது நல்லது.