டிசம்பர் 16, கார்டூம் (World News): சூடான் நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு இராணுவமும், துணை இராணுவப் படையின் அதிவிரைவுப் படையினரும் இணைந்து இராணுவப் புரட்சியில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து அந்நாட்டின் பிரதமர் அப்துல்லா ஹாம்டொக் சிறைப்பிடிக்கப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். பின்னர் அங்க ராணுவ ஆட்சியை நடைபெற்று வந்தது. ஆனால் மீண்டும் ஜனநாயக ஆட்சி வேண்டும் என்று கோரிக்கை விடுக்க ஆரம்பித்தனர். இராணுவத் தளபதி அப்தெல் ஃபத்தா அல் புர்ஹானுக்கும், துணை இராணுவத்தின் அதிவிரைவுப் படைத் தளபதி முகமது ஹம்தான் டாக்லோவுக்கும் இடையே மோதல் வெடித்ததால் இரு தரப்பினருக்கும் இடையே உள்நாட்டு போர் மூண்டது.
இந்தப் போரினால் பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். போரை நிறுத்த இரு தரப்பினரும் பேச்சு வார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று ஐ.நா சபை மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தின. தொடர்ந்து இரு ராணுவ தளபதிகளும் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் எந்த ஒரு பலனும் கிடைக்காததால் மீண்டும் உள்நாட்டுப் போர் தீவிரம் அடைந்தது. Indian Student Dies in US: அமெரிக்காவில் இந்திய தொழிலதிபரின் மகளுக்கு நடந்த துயரம்.. கார் விபத்தில் சிக்கி பலி., குடும்பமே சோகம்..!
இந்நிலையில் சூடானில் இருக்கும் இளம் வயதுள்ள பெண்கள், சிறுமிகள் போராளி குழுக்களால் கடத்தி செல்லப்பட்டு பலாத்காரம் செய்யப்படும் தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு வீடாக, ஆயுதமேந்தி நுழையும் போராளி குழுக்கள், அங்குள்ள 11 வயது முதல் 18 வயது வரை இருக்கும் சிறுமிகளை குறிவைத்து கடத்தி, ஒவ்வொரு தினமும் பாலியல் துன்புறுத்தல் செய்கின்றனர். சில நேரம் பலர் சேர்ந்து சிறுமிகளை கூட்டு பலாத்காரமும் செய்கின்றனர். இதனால் பல சிறுமிகள் கருத்தரித்தும் இருக்கின்றனர். மேலும் சிறுமிகளை கூடாரத்தில் தனியே வைத்து பாலியல் செய்துவிட்டு, சோள மாவு மற்றும் நீர் மட்டுமே சாப்பிட கொடுத்து அடிமைகளாக நடத்தி வருகின்றனர். சர்வதேச அளவில் பாதுகாப்பே இல்லாத நாடுகளின் பட்டியலில் மிகப்பெரிய இடத்தை தக்கவைத்த சூடான், தற்போது அதனை நிலைநாட்டி வருகிறது.