டிசம்பர் 18, நுங்கம்பாக்கம் (Chennai News): தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வருகிறது. வரும் 2 நாட்களில் வலுப்பெற்றும் காற்றழுத்த தாழ்வு பத்தி, மேற்கு-வடமேற்கு திசையில், தமிழக கடலோரப் பகுதிகளை நோக் நகரக்கூடும்.
இன்றைய வானிலை (Today Weather):
இதனால் இன்று வடகடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், இதர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுவையில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது. Chennai Airport: வயிற்றுக்குள் மாத்திரைகள்.. ரூ.14 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்திய பெண் கைது.. சென்னை விமான நிலைய அதிகாரிகள் அதிரடி.!
நாளைய வானிலை (Tomorrow Weather):
நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மதியம் 12 மணிவரை மழைக்கு வாய்ப்புள்ள இடங்கள்:
இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வரும் 3 மணிநேரத்திற்கு கனமழை பெய்யலாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. நண்பகல் 1 மணிவரையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 2 மணிநேரத்திற்கு சென்னையில் மழைக்கான (Chennai Weather Forecast) முன்னறிவிப்பு:
RMC Chennai - Nowcast Rain alert valid for next two hours 2024-12-18-10:07:26 pic.twitter.com/90na1c6ZbE
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) December 18, 2024