Rajasthan Shocker: வீட்டுவாசலில் 16 வயது சிறுமியை கடத்திச் சென்று கூட்டுப்பாலியல் பலாத்காரம்: மூவர் கும்பல் துணிகர செயல்.!

இந்தியாவில் அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை தடுக்க, அரசு கடுமையான சட்டங்களை இயற்றி குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Sexual Abuse / Rape Representational Image (Photo Credit: Pixabay)

நவம்பர் 21, ஜெய்ப்பூர் (Rajasthan News): இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தீட்வானா மாவட்டத்தில் வசித்து வரும் 16 வயது சிறுமி, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவில் தனது வீட்டிற்கு வெளியே நின்றுகொண்டு இருந்துள்ளார்.

அச்சமயம், அங்கு காரில் வந்த மர்ம நபர், சிறுமியை தனது காரில் ஏற்றிக்கொண்டு ஊருக்கு ஒதுக்குபுறமான இடத்திற்கு சென்று தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து மூவராக பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

கூட்டுப்பாலியல் பலாத்காரத்தை அரங்கேற்றிய கும்பல், மீண்டும் சிறுமியின் வீட்டருகே அவரை கொண்டுவந்து இறக்கிவிட்டு சென்றுள்ளது. மேலும், இதுகுறித்து வெளியே கூறினால், குடும்பத்தோடு கொலை செய்திடுவதாகவும் மிரட்டி இருக்கிறது. Houthis Footage about Hijack Cargo Ship: வணிக கப்பலை கடத்தியது எப்படி?.. வீடியோ வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்த ஹவுதி பயங்கரவாதிகள்..! லிங்க் உள்ளே.! 

மகள் காணாது விழிபிதுங்கிய பெற்றோர், மகளுக்கு நேர்ந்த கொடுமையை அறிந்து துடித்துபோயுள்ளனர். பின், இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரினை ஏற்ற காவல் துறையினர், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து மூன்று குற்றவாளிகளையும் விசாரணைக்கு பின்னர் கைது செய்தனர். இவர்களில் ஒருவர் 18 வயதுக்கு கீழ் இருக்கும் சிறார் ஆவார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement