Turkey Earthquake: நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட துருக்கிக்கு செல்கிறது இந்திய மீட்பு குழு - பிரதமர் அலுவலகம் அறிவிப்பு.!
அந்த வகையில், இந்தியாவும் தனது படையை அனுப்பியுள்ளது.
பிப்ரவரி 06, டெல்லி: இன்று அதிகாலை நேரத்தில் துருக்கி, வடமேற்கு சிரியா, சைப்ரஸ், லெபனான் (Turkey, Syria, Cyprus, Lebanon) நாடுகளில் ரிக்டர் அளவுகோலில் 7.8 என்ற அளவில் நிலநடுக்கம் (Earthquake) ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் தற்போது வரை 500 க்கும் மேற்பட்டோர் அதிகாரபூர்வமாக உயிரிழந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள பல அடுக்குமாடி குடியிருப்புகள் (Apartments Building) அடுத்தடுத்து சரிந்து விழுந்ததால் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இடிபாடுகளில் சிக்கியோரை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பாதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு மீட்பு படைகள் பல நாடுகளில் இருந்தும் செல்கின்றன. Shocking Death: மாணவர் உயிரிழந்த செய்தி கேட்டு, ஹாஸ்டல் வார்டனும் மாரடைப்பால் பலி.. அடுத்தடுத்த மரணத்தால் பதறிய மாணவர்கள்.!
இந்த நிலையில், இந்தியா சார்பில் மருத்துவ குழுக்கள் (Medical Team), மீட்பு குழுக்கள் (Rescue Team), என்.டி.ஆர்.எப் படை வீரர்கள் (NDRF Forces), நிவாரண பொருட்கள் அடங்கிய உதவி குழு உடனடியாக துருக்கி செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. மோப்ப நாய்கள் உட்பட 100 அதிகாரிகளை இந்தியா துருக்கிக்கு மீட்பு பணிகளுக்காக அனுப்பி வைக்க ஆணையிடப்பட்டுள்ளது என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
துருக்கிக்காக பிரார்த்தனை செய்யுங்கள்..