Parliament India: உலகிலேயே 4வது மிகப்பெரிய பாராளுமன்றத்தை கொண்ட இந்தியா; 105 ஆண்டுகள் கழித்து சாதனை படைத்த இந்தியா.!
ஆங்கிலேயர்கள் அமைத்த கட்டிடத்திற்கு விடைகொடுத்து, இந்தியராய் இந்தியரின் வரிப்பணத்தில் இந்தியர்களின் நல்லாட்சிக்காக கட்டப்பட்டுள்ள பாராளுமன்றத்தை எண்ணி பெருமைப்படும் நேரமாக இது அமைந்துள்ளது.
மே 28, புதுடெல்லி (Parliament): ஆங்கிலேய ஆட்சியின் போது அமைக்கப்பட்ட 90 ஆண்டுகள் பழமையான இந்தியாவின் நாடாளுமன்றத்திற்கு பதில், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான மத்திய அரசு புதிய நாடாளுமன்றத்தை கட்டிட முடிவெடுத்து, அவை வெற்றிகரமாக நிறைவு பெற்று நாளை (28-05-2023) அன்று திறக்கப்படவுள்ளது.
பழைய நாடாளுமன்றம்: 24,281 சதுர மீட்டர் பரப்பு கொண்டதாகும். இதனை அமைக்க அன்றைய நாளில் ரூ.83 இலட்சம் செலவு ஆனது. லோக்சபாவில் 532 பேர் அமரும் இருக்கையும், சென்ட்ரல் ஹாலில் 436 பேர் அமரும் வகையில் இருக்கையும், ராஜ்யசபாவில் 245 பேர் அமரும் வகையில் இருக்கையும் இருக்கின்றன.
புதிய நாடாளுமன்றம்: 64,500 சதுர மீட்டர் பரப்பு கொண்டதாகும். இதனை அமைக்க ரூ.862 கோடி செலவு ஆனது. லோக் சபாவில் 1272 பேர் அமரும் இருக்கையும், ராஜ்ய சபாவில் 384 பேர் அமரும் வகையில் இருக்கையும் உள்ளன. சென்ட்ரல் ஹால் விசாலமாக அமைக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடர் இனி புதிய நாடாளுமன்றத்தில் நடைபெறும். Rajinikanth Thanks PM Narendra Modi: தமிழர்களுக்கு பெருமை சேர்த்த பாரத் பிரதமருக்கு நன்றி – செங்கோலை பெற்ற பிரதமருக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி..!
நாடாளுமன்றத்தை அமைக்க 26,045 மெட்ரிக் டன் இரும்பு, 63,807 மெட்ரிக் டன் சிமெண்ட், 9,689 மெட்ரிக் டன் பறக்கும் சாம்பல் (Fly Ash), 23,04,095 மனித சக்தி உபயோகம் செய்யப்பட்டுள்ளன. கடந்த 2012ல் புதிய நாடாளுமன்றத்திற்கான வேலைகள் தொடங்கினாலும், 2020ல் அதிகாரபூர்வமாக அடிக்கல் நாட்டப்பட்டது.
கடந்த 1918ம் ஆண்டு புதிய நாடாளுமன்றத்திற்கான கட்டிடம் ஏற்படுத்த Blue Print தயார் செய்யப்பட்டு, 1927ல் நாடாளுமன்ற கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 105 ஆண்டுகள் கழித்து மீண்டும் புதிய நாடாளுமன்றம் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அவை முடிவடைந்துள்ளன.
2,890 பேர் அமரும் வசதியுடன் 1,71,800 சதுர மீட்டர் பரப்பு கொண்ட அளவில் சீனாவின் நாடாளுமன்றம் கட்டப்பட்டு, உலகிலேயே மிகப்பெரிய நாடாளுமன்றமாக முதல் இடத்தில் அது இருக்கிறது. அதனைத்தொடர்ந்து, ருமேனியா மற்றும் அமெரிக்கா அடுத்தடுத்த இடத்தை பெற, இந்தியா உலகளவில் 4வது மிகப்பெரிய நாடாளுமன்றத்தை தற்போது கொண்டுள்ளது.