Mobile Number 10 Digit: இந்தியர்களின் மொபைல் நம்பர் எதற்காக 10 இலக்கங்களை கொண்டுள்ளது தெரியுமா??.. அசரவைக்கும் அசத்தல் தகவல் இதோ.!
இது தவிர பண்டிகை காலங்களில் பலகோடி செல்போன்கள் விற்பனையும் ஆகின்றன.
டிசம்பர், 10: நாம் எப்போதும் செல்போன்களை (India's Mobile Number) பொறுத்த வரையில் இன்று வரை 10 இலக்க எண்களை உபயோகம் செய்து வருகிறோம். ஆனால், முன்பு 9 எண்கள் இருந்துள்ளது. அதேபோல, அன்றைய நாட்களில் டெலிபோன் இருந்த காலங்களில் ஒவ்வொரு ஊருக்கும் கோடு நம்பர், அதன்பின் பயனரின் நம்பர் என இருக்கும். இதுகுறித்த ரகசியத்தை நீங்கள் அறிந்தது உண்டா?. இந்தியாவில் உபயோகம் செய்யப்படும் 10 இலக்க எண்களின் ரகசியம் குறித்த தகவலை இன்று காணலாம்.
இன்று ஒவ்வொரு இந்தியர்களுடைய வீட்டிலும் ஏகப்பட்ட செல்போன்கள், செல்போனுக்கு 2 சிம்கார்டுகள் என குவிந்து கிடக்கின்றன. இது தவிர பண்டிகை காலங்களில் பலகோடி செல்போன்கள் விற்பனையும் ஆகின்றன. செல்போன்களை உபயோகம் செய்ய சிம் நெட்ஒர்க் சேவை நமக்கு முக்கியத்துவம் பெறுதல், அதனை ஓரணியில் எதிர்கால சிந்தனையுடன் இணைக்கவே 10 இலக்க எண்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
கடந்த 2019ல் 10 இலக்க எண்களை 11 இலக்கமாக மாற்ற தொலைத்தொடர்பு சேவைகளை கட்டுப்படுத்தும் டிராய் அமைப்புக்கு கோரிக்கை வந்தும் அது நிராகரிப்பு செய்துவிட்டது. 10 இலக்கத்திலேயே 5, 4, 3, 2, 1 என தொடங்கும் எண்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை. தேசிய எண்கள் திட்டம் (National Number Scheme) என்ற திட்டத்தின் மூலமாக செல்போன் எண்கள் வகைப்படுத்தப்படுகின்றன. அவைகளே சிம்கார்டுகளின் எண்களை தீர்மானிக்கிறது. முன்பு செல்போன்களுக்கு 9 இழக்க எண்கள் இருந்தன. December Festivals: டிசம்பரில் தமிழகத்தில் நடைபெறவுள்ள திருவிழாக்கள் எவை?.. அன்பு நெஞ்சங்களே திருவிழாக்களுக்கு தயாராகுங்கள்.!
மக்கள் செல்போன்களை பயன்படுத்த தொடங்கியதன் விளைவாக அவை 10 இலக்கத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. அதாவது, ஒரு இலக்கம் கொண்ட எண்ணை செல்போனுக்கு நம்பராக வழங்கும் போது 10 பேருக்கு மட்டுமே வழங்க இயலும். ஆனால், 2 இலக்க எண்களை வழங்கினால் 100 பேருக்கும், 3 இலக்க எண்களை வழங்கினால் 1000 பேருக்கும் என அதிகரித்துக்கொண்டே செல்லலலாம்.
இந்தியாவில் மக்கள் தொகை என்பது 100 கோடியை தாண்டிவிட்ட நிலையில், 9 இலக்க எண்களை பயன்படுத்தினால் பிரச்சனை வரும் என முன்பே கணிக்கப்பட்டு 10 இலக்க எண்களாக (0-9,99,99,99,999) மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதனால் 1000 கோடி பேருக்கு சேவையினை வழங்கலாம்.
அதன்படி, 9 எனத் தொடங்கும் எண்களை வைத்து 100 கோடி எண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 9, 8, 7,6 வரை பெரும்பாலும் எண்கள் உபயோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், விரைவில் 5ல் இருந்து தொங்கும் எண்களும் அறிமுகம் ஆகலாம். இதனால் 500 கோடிக்கும் அதிகமான சிம் எண்களை பெறலாம். இந்தியாவின் மக்கள் தொகை 140 கோடி என்றால், 280 கோடி எண்கள் உபயோகம் செய்யலாம். மேலும், ஒருவர் ஒரு செல்போன் நம்பரை பல நாட்கள் பயன்படுத்தாமல் இருந்தால் அது காலாவதியாகி மற்றொருவருக்கு அந்த ஏன் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.