5 Babies in Delivery: ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள்; தாய்-சேய் நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் அறிவிப்பு.!

மருத்துவ உலகில் எப்போதாவது ஆச்சரியமூட்டும் நிகழ்வுகள் நடக்கும். அந்த வகையில், பெண்மணி ஒருவர் 5 குழந்தைகளை ஈன்றெடுத்துள்ளார்.

Ranchi RIMS 5 Baby Delivery (Photo Credit: Twitter)

மே 23, ராஞ்சி (Jharkhand News): ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சியில் (Ranchi), ராஜேந்திரா மருத்துவ ஆராய்ச்சி பல்கலைக்கழகம் (RIMS) செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இத்கோரி, சித்ரா (Chatra, Itkhori) பகுதியை சேர்ந்த பெண்மணி பிரசவத்திற்காக அனுமதியாகியுள்ளார்.

அவருக்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவரின் வயிற்றில் 5 குழந்தைகள் இருப்பதை கண்டு இன்ப அதிர்ச்சியுற்றனர். இதனையடுத்து, பெண்மணிக்கு இயற்கை பிரசவ முறையில் 5 குழந்தைகளையும் பத்திரமாக மருத்துவர்கள் பெற்றெடுக்க வைத்தனர். Punjab National Bank on 2000 Rupees Note: அதிரடி..! இனி வங்கியில் ரூ.2000 பணத்தை மாற்ற இந்த ஆவணம் தேவையில்லை – பஞ்சாப் நேஷனல் வங்கி அறிவிப்பு.!

இந்த குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களின் உடல்நிலையை மருத்துவர் ஷாஷி பால் சிங் தலைமையிலான மருத்துவர்கள் தொடர்ந்து சோதனை செய்து வருகின்றனர். குழந்தைகள் மற்றும் தாய் நலமுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share Now
Advertisement


Advertisement
Share Now
Advertisement