Praja Dhwani Yatra: வாரி வல்லாய் ரூ.500 பணத்தை வீசியெறிந்து பிரச்சார கூட்டத்தில் சிக்கிக்கொண்ட டி.கே சிவகுமார்.. வைரலாகும் வீடியோ.!
பணத்திற்கும், மதுபானத்திற்கும் விலைபோகும் வாக்காளர்கள் இருக்கும் வரையில் ஆட்சிக்கு வருபவர்கள் மக்களை ஏமாற்றிக்கொண்டுதான் இருப்பார்கள் என்பது ஒவ்வொரு மக்களும் உணர்ந்து அனுபவிக்கும் உண்மையாக இருக்கிறது.
மார்ச் 29, மாண்டியா (Karnataka News): கர்நாடக (Karnataka) மாநிலத்தில் நடப்பு ஆண்டு சட்டப்பேரவை (Karnataka Assembly Poll) தேர்தலுக்கான அறிவிப்பு, இன்று காலை 11:30 மணியளவில் தேர்தல் ஆணையத்தால் (Election Commission) தெரிவிக்கப்படவுள்ளது. இந்த தேர்தலுக்கு அம்மாநில அரசியல் கட்சிகள் (Political Parties) முழுவீச்சில் தயாராகி வருகின்றனர். ஆளும் பாஜக (BJP) தரப்பு தனது ஆட்சியை மீண்டும் நிலைநிறுத்த முயற்சிகள் மேற்கொள்கிறது.
அதேபோல, ஆட்சியில் இருந்து பிரிக்கப்பட்ட குமாரசாமியின் ஜனதா (JD S) தளம், ஆட்சியை இழந்து மீண்டும் அதனை கைப்பற்றவேண்டும் என்ற எண்ணத்தோடு முழுவீச்சு களப்பணியில் இறங்கியுள்ள காங்கிரஸ் (Congress) கட்சியின் சார்பிலும் ஓய்வறியாமல் களப்பணிகள் நடந்து வருகிறது. Planet Alignment: மக்களே நேற்று வானில் நடந்த அதிசயத்தை பார்க்க மறந்துடீங்களா??.. இதே உங்களுக்காக பிரத்தியேக வீடியோ.!
இதற்கிடையில், அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே சிவகுமார் (DK Sivakumar) மாண்டியா மாவட்டத்தில் உள்ள பெவினஹள்ளி (Bevinahalli, Mandya) பகுதியில் தேர்தல் பரப்புரை பிரச்சார பயணம் மேற்கொண்டு இருந்தார். அப்போது, அவர் தனது வாகனத்தில் இருந்தவாறு ரூ.500 பணத்தை தொண்டர்களிடையே வீசினார்.
இதுகுறித்த வீடியோ முன்னாள் சென்றுகொண்டு இருந்த ஊடகத்துறையினரால் காட்சியாக்கப்பட்டுள்ளது. மாநில அரசின் மீது பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைக்கும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர், தேர்தல் பிரச்சார கூட்டத்தின்போது பணத்தை வீசியெறிந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.