KA Election Results 2023: 16 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியடைந்த பாஜக வேட்பாளர்; போராட்டத்தில் குதித்த காங்கிரஸ் கட்சியினர்.!
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்போது, வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றிலும் நின்று கொண்டு காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
மே 14, ஜெயாநகர் (Karnataka News): கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 சட்டப்பேரவை (Karnataka Assembly Poll 2023) தொகுதிகளுக்கு நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகின. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி (Karnataka Congress) 136 இடங்களில் வெற்றி அடைந்து, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றுகிறது.
ஆளும் கட்சியாக இருந்த பாரதிய ஜனதா கட்சி (Karnataka BJP) 66 இடங்களில் வெற்றி அடைந்த நிலையில், குமாரசாமியின் ஜனதா தளம் (எஸ்) 18 தொகுதிகளில் வெற்றி அடைந்தது. கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை பல ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பிடிப்பதால், அம்மாநில காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். பல இடங்களில் கொண்டாட்டம் தொடருகிறது. Women Protest: பாலியல் தொல்லை கொடுக்கும் மாமனார்; கண்டுகொள்ளாத கணவனால் தர்ணாவில் குதித்த இளம்பெண்..!
இந்த நிலையில், பாஜக சார்பில் ஜெயா நகர் தொகுதியில் சி.கே ராமமூர்த்தி (CK Ramamurthy) மற்றும் காங்கிரஸ் சார்பில் சௌமியா ரெட்டி (Sowmya Reddy) ஆகியோர் போட்டியிட்டனர். நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு வந்த நிலையில், 16 வாக்குகள் வித்தியாசத்தில் சி.கே ராமமூர்த்தி வெற்றி அடைந்தார். இந்த வெற்றியை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் போராட்டம் நடத்தினர்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்போது, வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றிலும் நின்று கொண்டு போராட்டம் நடத்திய காங்கிரசார், பாஜக தரப்பினர் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து இயந்திரத்தை அவர்களுக்கு சாதகமாக மாற்றிக்கொண்டனர் என்று போராட்டம் செய்தனர்.

#WATCH | BJP’s CK Ramamurthy defeated Congress' Sowmya Reddy by a narrow margin of 16 votes in the Jayanagar constituency; Congress workers held a protest as they alleged misuse of government machinery to favour Ramamurthy.#KarnatakaElectionResults2023 pic.twitter.com/I08HAzYJu3
— ANI (@ANI) May 14, 2023