Death Sentence in Aluva Rape-Murder Case: 5 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொடூர கொலை: குற்றவாளிக்கு உச்சபட்சமாக மரண தண்டனை.. நீதிபதி அதிரடி.!
கடந்த ஜூலை மாதம் சிறுமி கேரளாவில் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து போக்ஸோ சட்டம் அமல்படுத்தப்பட்ட நன்னாளில் நீதிபதி தீர்ப்பு வழங்கி இருக்கிறார்.
நவம்பர் 14, திருவனந்தபுரம் (Kerala News): கேரளா மாநிலத்தில் உள்ள ஆலுவா (Aluva, Kerala) மாவட்டத்தில், 5 வயதுடைய சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வந்தார். இவரின் பெற்றோர்கள் பீகார் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர்கள்.
குடும்ப சூழ்நிலை காரணமாக ஆலுவா வந்து தங்கியிருந்த நிலையில், இங்கேயே வேலை பார்த்து வந்துள்ளனர். கடந்த ஜூலை 28ம் தேதி தம்பதியின் 5 வயது மகள் வீட்டில் இருந்து மாயமாகியுள்ளார். அவரை பல இடங்களில் தேடியும் காணவில்லை.
இதனையடுத்து, சிறுமி மாயமானது தொடர்பாக அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சிறுமியின் உறவினர்களும், காவல் துறையினரும் மாயமான சிறுமியை தேடி வந்தனர்.
இந்நிலையில், மறுநாள் காலையில் சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டது உறுதியானது. Garlic Benefits to Erectile: விறைப்புத்தன்மை பிரச்சனையால் அவதிப்படுறீங்களா?.. 2 மாதம் தொடர்ந்து இதனை சாப்பிட்டால் போதும்..! தெரிஞ்சிக்கோங்க பாஸ்.!
அங்குள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்த பின்னர், சிறுமியை கடத்திச்சென்ற அஷ்வாக் ஆலம் (Ashwaq Alam) என்பவர் கைது செய்யபட்டார். அவரிடம் நடத்த விசாரணையில், சிறுமியை தன்னுடன் அழைத்துச்சென்று, பலாத்காரம் செய்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இதனையடுத்து, இவ்வழக்கு தொடர்பான விசாரணை போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கின் இறுதி விசாரணை நவமபர் 4ம் தேதி நிறைவுபெற்றது. நீதிபதி கே சோமன், நவம்பர் 14ம் தேதி இறுதி தீர்ப்பு வாசிக்கப்படும் என்று தெரிவித்தார்.
நவம்பர் 14, 2012 அன்று குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க போக்ஸோ சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டம் அமல்படுத்தப்பட்ட அன்றே, குற்றவாளி ஆலத்திற்கு எதிராக அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. காவல் துறையினர் 16 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவும் செய்துள்ளனர். அனைத்து குற்றச்சாட்டுகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்ட நீதிபதி, உச்சபட்சமாக மரண தண்டனை வழங்கி, விரைந்து அதனை நிறைவேற்றிடவும் ஆணையிட்டுள்ளார். பச்சிளம் சிறுமியை ஈவுஇரக்கமின்றி பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளிகளுக்கு, அவனின் பாணியிலேயே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது இந்திய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
மேலும், இவ்வழக்கு விசாரணை 105 நாட்களுக்குள் நிறைவு பெற்று, குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.