Kerala BJP: பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து; கேரளா மாநில பாஜக தலைவர் மீது வழக்குப்பதிவு.!
மஹாபாரதத்தில் வரும் அரக்கியின் உருவத்தை ஒப்பிட்டு, கேரளா மாநில சி.பி.ஐ.எம் பெண் தலைவர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த மாநில பாஜக தலைவரின் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மார்ச் 29, திருவனந்தபுரம் (Kerala News): கேரளா மாநிலத்தின் (Kerala BJP) பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவராக பதவி வகிப்பவர் கே. சுரேந்திரன் (K. Surendran). இவர் சி.பி.ஐ.எம் (CPI-M) கட்சியை சேர்ந்த பெண் தலைவர்களை குறிப்பிட்டு, "அக்கட்சியில் இருக்கும் பெண் தலைவர்கள் பணம் திருடி தடித்து மகாபாரதத்தில் (Mahabharata) வரும் பூதகியை போல கொழுத்து இருக்கிறார்கள். இவர்கள் கேரள மாநில பெண்களை கேலியாக்க வழிவகை செய்கிறார்கள்" என அவர்களை அவமதிக்கும் விதத்தில் பேசியிருந்தார்.
இவரின் பேச்சுக்கு கடுமையான கண்டனங்கள் எழுந்த நிலையில், அம்மாநில காங்கிரஸ் தலைவர் சுதாகரன் (Sudhakaran, Kerala State Congress President), "இப்படியான மோசமான பெண்களுக்கு எதிரான பேச்சுக்களை கேரளா முன்னெப்போதும் கேட்டது இல்லை. கேரளாவை ஆட்சி செய்து வரும் பினராயி விஜயனும் (Pinarayi Vijayan), மாநில செயலாளர் கோவிந்தனும் பாஜகவை எதிர்த்து பேச இயலாமல் பயந்து இருக்கிறார்கள். Ponniyin Selvan 2: இன்று இரவு வெளியாகிறது பொன்னியின் செல்வன் 2 டிரைலர்… எதிர்பார்ப்பின் உச்சக்கட்டத்தில் ரசிகர்கள்.!
நாங்கள் அப்படி இருக்கமாட்டோம். கே. சுரேந்திரன் பெண்கள் குறித்து பேசியதற்கு பொதுவெளியில் கட்டாயம் மன்னிப்பு கேட்க வேண்டும். அரசியல் ரீதியாக நாங்கள் வைக்கும் விமர்சனத்திற்கு உடனடியாக பதில் கொடுக்கும் சி.பி.எம்., எதற்காக பாஜகவை எதிர்க்க பயம் கொள்கிறது?" என கூறினார்.
இந்த நிலையில், கேரளா மாநில பாஜக தலைவர் கே. சுரேந்திரனுக்கு எதிராக சி.பி.ஐ.எம் தலைவர் சி.எஸ் சுஜாதா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் இந்திய அரசியலமைப்பு சட்டம் 345A மற்றும் 509-வது பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)