IPL Auction 2025 Live

Kuno National Park: இனவிருத்தி சண்டையில் பெண் சிறுத்தையை கொன்ற ஆண் சிறுத்தை?.. தேசிய பூங்காவில் சம்பவம்.!

சிறுத்தைகள் இனவிருத்தி காலத்தில் தனது தேவையை பூர்த்தி செய்ய எத்தகையக எல்லைக்கும் செல்லக்கூடியவை என்பதை ஒரேயொரு செயல் உணர்த்திவிட்டது.

Cheetah file pic (Photo Credit; Reuters)

 

மே 10, குனோ தேசிய பூங்கா (Madhya Pradesh News): மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சிவபுரி மாவட்டம், குனோ பகுதியில் குனோ தேசிய பூங்கா (Kuno National Park) உள்ளது. இது 748 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட தேசிய பூங்கா ஆகும். இங்கு ஏராளமான வன உயிரினங்கள் இருக்கின்றன.

இங்குள்ள பெண் சிறுத்தை "Daksha" தென்னாபிரிக்க நாட்டில் இருந்து கொண்டு வரப்பட்டது ஆகும். இந்நிலையில், தக்சா நேற்று காலை 10:45 மணியளவில் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, கால்நடை மருத்துவர்களின் முயற்சியில் சிகிச்சையில் இருந்தது. சிகிச்சையில் இருந்த தக்சா அது பலனின்றி பகல் 12 மணியளவில் உயிரிழந்தது. Diabetes Patients: சர்க்கரை நோயாளிகளுக்கு சிறப்பு மருந்தாகும் வெந்தயம்.. ஊறவைத்து சாப்பிட்டால் எக்கசக்க பலன்கள்.!

இந்த சிறுத்தை காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில் ஆண் சிறுத்தையுடன் புணர்ச்சி முயற்சியில் ஏற்பட்ட வன்முறை காரணமாக தாக்கப்பட்டு கொல்லப்பட்டு இருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது. சிறுத்தைகளை பொறுத்தவரையில் இனவிருத்தி காலங்களில் பெண் சிறுத்தை மீது வன்முறை தாக்குதலை ஆண் சிறுத்தை நடத்தும் என்பது இயல்பானது.

அத்தகைய முயற்சியின் போது இவ்வாறான சோகம் நடந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. உயிரிழந்த பெண் சிறுத்தையின் உடலை அதிகாரிகள் பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளனர். கடந்த ஒரே மாதத்தில் குனோ தேசிய பூங்காவில் சிறுத்தைகளின் உயிரிழப்பு 3 என்ற எண்ணிக்கையை பெற்றுள்ளது.