ஏப்ரல் 15, லக்னோ (Sports News): 2025 ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 30வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் (LSG Vs CSK) அணிகள் மோதின. இதில், சிஎஸ்கே 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டி தொடங்குவதற்கு முன்பு, சிஎஸ்கே கேப்டனாக உள்ள தோனி (MS Dhoni) மைதானத்தில் நடந்து சென்றார். அப்போது, குறுக்கே வந்த 'ரோபோ நாயை' (Robot Dog) நகைச்சுவையாக தூக்கி கீழே கவிழ்த்தி வைக்க, அது நகர முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டது. இதே போன்று, ஆட்டம் முடிந்த பிறகு, அந்த ரோபோ நாயை தோனி கையில் தூக்கி சென்ற வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை தோனி ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் வைரலாக்கி வருகின்றனர். LSG Vs CSK: தோல்வியில் இருந்து மீளுமா சென்னை? இன்று லக்னோ அணியுடன் மோதல்.! புள்ளிப்பட்டியலில் எத்தனையாவது இடம் தெரியுமா?

வீடியோ இதோ:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)