Salem News: இன்ஸ்டா காதலால் விபரீதம்; கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து.. பட்டப்பகலில் வாலிபர் வெறிச்செயல்..!

சேலத்தில் பட்டப்பகலில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திவிட்டு, வாலிபர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Salem News: இன்ஸ்டா காதலால் விபரீதம்; கல்லூரி மாணவிக்கு கத்திக்குத்து.. பட்டப்பகலில் வாலிபர் வெறிச்செயல்..!
Crime File Pic (Photo Credit: Pixabay)

Cஏப்ரல் 16, சேலம் (Salem News): சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் மோகன பிரியன். இவர், இன்ஸ்டாகிராம் மூலம் கல்லூரி மாணவி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர், இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த வாரம் மோகன பிரியன், கல்லூரி மாணவியை நேரில் சந்தித்துள்ளார். இன்ஸ்டாவில் பழகிய வாலிபரை, நேரில் பார்த்ததும் அவரை பிடிக்கவில்லை என்று மாணவி தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஏஐ மூலம் இளம்பெண்ணின் ஆபாச வீடியோ.. மிரட்டல் விடுத்த கும்பல்.., நடந்தது என்ன..?

ஆபத்தில் முடிந்த இன்ஸ்டா காதல்:

இதனையடுத்து, அவருடன் பேசுவதை முற்றிலுமாக தவிர்த்து வந்துள்ளார். இதுதொடர்பாக, இருவருக்கும் இடையே கடந்த ஒரு வாரமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, மாணவிக்கு குடும்பத்தினர் அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். இதனையறிந்து ஆத்திரமடைந்த மோகன பிரியன், கல்லூரி மாணவியை சந்திக்க சென்றுள்ளார். மாணவியும் கல்லூரிக்கு செல்வதற்காக சேலம் பழைய பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதுள்ளது. அதில், ஆத்திரமடைந்த அவர், திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியை சரமாரியாக குத்தியுள்ளார்.

போலீஸ் விசாரணை:

பின்னர், தானும் கழுத்தில் கத்தியால் அறுத்து கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்து அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனே, இருவரையும் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, தகவல் அறிந்து வந்த சேலம் நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

(The above story first appeared on LatestLY on Apr 16, 2025 10:30 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).