DR Congo Boat Capsizes: படகு கவிழ்ந்து 50 பேர் பலி.. காங்கோவில் சோகம்.!

400 பேர் பயணம் செய்த படகு விபத்தில் சிக்கி 50 பேர் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. 100 பேர் தப்பிவிட எஞ்சியோரின் நிலை தெரியவில்லை. இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

DR Congo Boat Capsizes: படகு கவிழ்ந்து 50 பேர் பலி.. காங்கோவில் சோகம்.!
Congo Boat Accident (Photo Credit: @NYPost / @africansinnews X)

ஏப்ரல் 17, காங்கோ (World News): ஆப்ரிக்காவில் உள்ள காங்கோவில் நிலவி வரும் உள்நாட்டு குழப்பத்தின் காரணமாக, ஏராளமான மக்கள் படகுகள் வழியாக ஆபத்தான கடல்வழிப்பயணம் மேற்கொண்டு ஐரோப்பிய நாடுகளுக்கு குடிபெயர்ந்து வருகின்றனர். இவ்வாறான பயணத்தின்போது ஒருசிலநேரம் விபத்துகளில் சிக்கி பலியாகுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில், காங்கோவில் உள்ள மாபடாகா (Mbandaka) நகரில் இருக்கும் ஆறில் 400 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு படகு ஒன்று பயணித்தது. காதல் மனைவியிடம் ஜாதியைச்சொல்லி வம்பு.. கணவனுக்கு ஆப்பு வைத்த சம்பவம்.!

50 பேர் பலி உறுதி:

இந்த படகில் உணவு சமைக்கும்போது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. இதனால் படகு விபத்தில் சிக்கி அதில் இருந்தவர்கள் நீரில் விழுந்து தத்தளித்தனர். மொத்தமாக 400 பேர் பயணம் செய்த படகில் 100 பேர் உயிர்தப்பியதாக கூறப்படுகிறது. 50 பேரின் சடலங்கள் அதிகாரபூர்வமாக மீட்கப்பட்டுள்ளது. எஞ்சியோரின் நிலை தெரியவில்லை. அவர்களும் உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

படகு தீப்பிடித்து விபத்துக்குள்ளான பதறவைக்கும் காட்சிகள்:

(The above story first appeared on LatestLY on Apr 17, 2025 08:26 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).