Jalaun Doctor Force Child Smoking (Photo Credit: @SachinGuptaUP X)

ஏப்ரல் 17, ஜலாவுன் (Uttar Pradesh News): உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜலாவுன் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. சம்பவத்தன்று மருத்துவமனைக்கு 6 வயதுடைய சிறுமி சளித்தொல்லை காரணமாக சிகிச்சை பெற வந்தார். அப்போது, பணியில் இருந்த மருத்துவர் சுரேஷ் சந்த் என்பவர், சிறுமிக்கு சிகிரெட் பிடிக்க கற்றுக்கொடுத்தார். MI Vs SRH: ஐபிஎல் 2025: மும்பை இந்தியன்ஸ் Vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.. முன்னேறுமா? அடிசறுக்குமா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு.! 

குழந்தைக்கு சிகிரெட் குடிக்க கற்றுக்கொடுத்து அதிர்ச்சி:

இதனை அங்கிருந்தவர் வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிடவே, வீடியோ வைரலாகியது. இதனையடுத்து, அம்மாநிலத்தின் துணை முதல்வர் பிரஜேஷ் பதாக், இவ்விசயம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். மேலும், உடனடியாக மருத்துவர் பணியில் இருந்த்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மருத்துவர் சுரேஷ் சிகிரெட்டை எப்படி பிடிக்க வேண்டும் என எடுத்துரைத்து, அதனை பற்றவைத்த சம்பவம் காட்சியில் இடம்பெற்றுள்ளது. குழந்தைக்கு சிகிரெட் புகைக்க கற்றுக்கொடுக்கும் இவரெல்லாம் மருத்துவர்தானா? என நெட்டிசன்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

குழந்தைக்கு சிகிரெட் பற்றவைத்த மருத்துவர்: