ஏப்ரல் 14, டெல்லி (Delhi News): உலகத் தமிழர்களால் ஒற்றுமையுடன் சிறப்பிக்கப்படும் தமிழ் புத்தாண்டு 2025 (Tamil Puthandu 2025) பண்டிகை இன்று சிறப்பிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. உலகம் முழுவதும் உள்ள தமிழ் பேசும் மக்கள் சிறப்பாக கொண்டாடும், இந்நாளில் பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi), எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், மகிழ்ச்சியான புத்தாண்டு தினத்தையொட்டி அன்பான வாழ்த்துக்கள்! இந்தப் புத்தாண்டு வளத்தையும், நல்ல ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் கொண்டு வரட்டும். அனைவரும் நல்ல ஆரோக்கியத்துடன் ஆசீர்வதிக்கப்படட்டும். இவ்வாறு பதிவிட்டுள்ளார். மேலும், ஆங்கிலத்திலும் பிரதமர் மோடி தனது வாழ்த்து செய்தியை குறிப்பிட்டுள்ளார். Tamil Puthandu 2025: இன்று தமிழ் வருடப்பிறப்பு 2025: வாழ்த்துச் செய்தி, கொண்டாட்டங்கள் வழிமுறைகள் இதோ.!
பிரதமர் மோடி தமிழ் புத்தாண்டு வாழ்த்து:
Puthandu greetings to everyone! pic.twitter.com/8H98EFIYms
— Narendra Modi (@narendramodi) April 14, 2025
(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)