Mamata Banerjee: 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள் போராட்டத்தில் பாட்டு பாடி மகிழ்ந்த மம்தா பேனர்ஜி.!

இந்தியாவில் உள்ள கிராமப்புறத்தில் வேலைவாய்ப்புகளை வழங்க மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்ட 100 நாள் வேலைத்திட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யக்கூறி மேற்கு வங்கத்தில் போராட்டம் நடக்கிறது.

Mamata Banerjee Sing Bengali Song During 100 Day Workers Protest (Photo Credit: ANI)

மார்ச் 30, கொல்கத்தா (West Bengal News): மேற்கு வங்கம் மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் 100 நாட்கள் வேலைத்திட்ட ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு 100 நாள் வேலைத்திட்டத்திற்கு தேவையான நிதியை மாநிலங்களுக்கு வழங்கி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் இருக்கும் ஏழை-எளிய மக்கள் தினமும் குறைந்தபட்ச ஊதியம் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ஊராட்சி மற்றும் ஒன்றியத்தை சேர்ந்த மக்கள் தங்களின் பகுதிக்குள் இருக்கும் ஏரி மற்றும் கால்வாய் போன்ற நீர்நிலைகள் & நீர்வழித்தடங்களை தூர்வாருதல் உட்பட பிற பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனால் அவர்களுக்கு வேலையும் கிடைக்கிறது, அவர்களது கிராமமும் மழை நீரை சேமிக்கும் பணியை சுயமாக மேற்கொள்கிறது. Vijayawada to Kuwait: விஜயவாடாவில் இருந்து குவைத்துக்கு விமானத்தில் செல்ல 1 வாரம் காத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் 15 பயணிகள்.. ஏன் தெரியுமா?.!

இந்த நிலையில், மேற்கு வங்கம் மாநிலத்திற்கு ஒதுக்க வேண்டிய 100 நாள் வேலைக்கான நிதியை மத்திய அரசு ஒதுக்க கால தாமதம் ஆகியுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் உள்ள 100 நாள் வேலை பணியாளர்கள், மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களது இரண்டாவது நாள் போராட்டத்தில் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கலந்துகொண்டார்.

அங்கு போராட்ட குழுவினரிடையே உரையாற்றிய முதல்வர், அவர்களுடன் அமர்ந்து பெண்களை பாடலையும் பாடினார்.