IndiGO Complaint: மதுபோதையில் விமான பணியாளர்களுடன் தகராறு; 2 பயணிகள் மீது வழக்குப்பதிவு.. மும்பை விமான நிலையத்தில் பரபரப்பு.!

துபாய் செல்ல நினைத்த 2 பயணிகள் மதுபோதையில் சண்டையிட்ட காரணத்தால், பயணத்தில் இருந்து விலக்கப்பட்டனர். மேலும், அவர்களின் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

IndiGo Flight | File Picture (Photo Credit: Wikipedia Commons)

மார்ச் 23, விமான நிலையம், மும்பை (Mumbai Airport): மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை (Mumbai, Maharashtra) விமான நிலையத்தில் இருந்து, நேற்று துபாய்க்கு (Mumbai to Dubai) இண்டிகோ (IndiGo) விமானம் பயணம் செய்தது. இந்த விமானத்தில் தாத்தரேய பாபர்டேகர், ஜான் ஜியார்ஜ் டி'சூசா என்பவர்களும் பயணம் செய்ய தயாராகியுள்ளனர்.

இந்நிலையில், விமானத்தில் பயணிகள் அனைவரும் தங்களது பயணத்திற்கு தயாரானபோது, போதையில் இருந்த இருவரும் சண்டையிட்டுள்ளனர். மேலும், அவர்களை சமாதானப்படுத்தச்சென்ற விமான பணியாளர்களுடனும் வாக்குவாதம் செய்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். WhatsApp Latest Update: ஒன்றல்ல, இரண்டல்ல.. 4 போன்களில் வாட்சப்பை உபயோகம் செய்யலாம் – வாட்சப் அதிரடி அறிவிப்பு.!

இதனையடுத்து, இதுகுறித்து விமான நிலைய பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்படவே, அவர்கள் விரைந்து வந்து 2 பேரையும் விமானத்தில் இருந்து இறக்கி, விமான காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

அங்கு இருவரிடமும் விசாரணை நடத்திவிட்டு, இண்டிகோ பணியாளர்கள் கொடுத்த புகாரின் பேரில் இந்திய அரசியலமைப்பு சட்டம் 336 வது பிரிவின்படி, விமான பாதுகாப்பு சாராம்ச பிரிவுகள் 21, 22, 25-ன் கீழ் வழக்குபதிந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் சொந்த பிணையில் விடுவித்து அனுப்பி வைக்கப்பட்டனர். மேற்படி விசாரணை நடந்து வரும் நிலையில், அவர்களின் பயணம் இரத்து செய்யப்பட்டது.

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement