Women Against Crime in India 2022: மாவட்ட அளவில் 1,788 புகார்கள்: பெண்களுக்கு எதிரான குற்றங்களின் தலைநகராக திகழும் மாவட்டம். அதிர்ச்சி ரிப்போர்ட்.!

மாநிலத்தில் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் மாவட்டத்திலேயே அதிகளவிலான பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, ஆட்கடத்தல், கற்பழிப்பு தொடர்பான புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Women Abuse | Feeling Sad File Pic (Photo Credit: Pixabay)

டிசம்பர் 07, புவனேஸ்வர் (Odisha News): கடந்த 2022ம் ஆண்டு மாநில வாரியாக, மாவட்ட அளவில் நடக்கும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் தொடர்பான தரவுகளை தேசிய குற்ற ஆவணங்கள் காப்பகம் (National Crime Records Bureau NCRB) சமீபத்தில் வெளியிட்டது. இந்த தரவுகளின்படி, ஒடிஷா மாநிலத்தில் உள்ள மயூர்பஞ்ச் மாவட்டத்தில் அதிக அளவிலான பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்தது தெரியவந்துள்ளது.

மயூர்பஞ்ச் மாவட்டம்: பழங்குடியின மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மாவட்டத்தில், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, குற்றம், கடத்தல் என 1,788 புகார்கள் கடந்த ஆண்டு மட்டும் அம்மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கஞ்சம் மாவட்டத்தில் 1,532 பெண்களுக்கு எதிரான குற்றங்களும், கேந்த்ரபரா மாவட்டத்தில் 1,476 பெண்களுக்கு எதிரான குற்றங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் மட்டும் 394 பெண்கள் கடத்தல் மற்றும் வற்புறுத்தல் தொடர்பா பூக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. TV Actress Loss Against BJP Candidate: சொந்த தொகுதியில் பாஜக வேட்பாளரை எதிர்த்து போட்டியிட்டு, 2292 வாக்குகளுடன் மண்ணைக்கவ்விய பிரபல சின்னத்திரை நடிகை.! 

தொழில்நுட்ப ரீதியாகவும் பெண்கள் சந்தித்த கொடுமை: மயூர்பஞ்ச் மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த 45 புகார்களும் பெண்களுக்கு எதிரான வழக்குகளாக அமைந்துள்ளன. அதாவது, அங்குள்ள குட்டக் காவல் எல்லையில் வசிக்கும் பெண்கள் மட்டுமே 37 புகார்கள் பதிவு செய்துள்ளனர். இவை அனைத்தும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மட்டும் ஆகும்.

பலாத்காரம் & கொலை: 2022ம் ஆண்டு தரவுகளின்படி மயூர்கஞ்ச், கேந்த்ரபரா, க்ஹோர்தா ஆகிய மாவட்டங்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான புகார்கள் பெறப்பட்டதில் முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளது. அதேவேளையில், பலாத்காரம் செய்து கொலை செய்ததாக மயூர்கஞ்ச் மற்றும் நுபடா மாவட்டத்தில் தலா ஒரு வழக்குகள் வீதம் பதிவு செய்யப்பட்டுள்ளன.

போக்ஸோ வழக்குகளும் பதிவானது: குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பிரச்சனைகள் விவகாரத்திலும் மயூர்கஞ்ச் மாவட்டம் முதன்மை இடத்தில் இருக்கிறது. அங்கு 2022ல் மட்டும் 193 போக்ஸோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.