Love Jihad: சீக்கிய விதவை பெண்ணை காதலிப்பதாக ஏமாற்றி மதம்மாற்ற முயற்சி.. "லவ் ஜிகாத் குற்றம்" காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்..!
முகநூலில் பெண்ணிடம் நட்பாக பழகி காதலை வளர்த்து தனிமையில் சந்தித்து இருவர் ஒருவரையொருவர் புரிந்து இணைந்த நிலையில், காரியம் ஆனதும் மதம்மாற்றும் முயற்சியில் இறங்கிய காதலனை எதிர்த்து போராடி வரும் பெண்ணின் துயரம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
மே 07, புதுடெல்லி (Crime News): புதுடெல்லியில் உள்ள லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் அஜ்மத் அலி கான் (Azmat Ali Khan). இவர் கடந்த 2017ம் ஆண்டு சீக்கிய சமூகத்தை சேர்ந்த கதக் நடன ஆசிரியைக்கு நட்பு அழைப்பு விடுத்துள்ளார். முதலில் முகநூலில் நட்பை ஏற்காத பெண்மணி, பின்னாளில் அதனை ஏற்றுக்கொண்டுள்ளார். அவர் கணவரை இழந்து தனியே வாழ்ந்து வருபவர் ஆவார்.
இந்நிலையில், முதலில் ஆசிரியையிடம் நட்பு ரீதியாக பேசி வந்த அலி கான், பின்னாளில் அதனை காதலாக மாற்றியுள்ளார். 2018ல் இருவரும் ஒருவரையொருவர் உயிருக்கு உயிராக காதலித்து தனிமையில் இருந்துள்ளனர். பெண்மணி அஜ்மத் அலி கானுடன் தனிமையில் இருப்பதை அஜ்மத் வீடியோ பதிவு செய்ததாக தெரியவருகிறது. 5G Smartphones: 5G ஸ்மார்ட்போன்கள் வாங்க தடபுடலாக தயாராகும் இந்தியர்கள்; வெளியான அதிரடி ரிப்போர்ட்.. கொண்டாட்டத்தில் செல்போன் கம்பெனிகள்.!
இருவரும் தனிமையில் பல நாட்கள் சந்தித்ததை தொடர்ந்து, நமது வாழ்க்கையை சட்டப்படி திருமணம் செய்து தொடரலாம் என பெண்மணி விருப்பம் தெரிவித்துள்ளார். அதனை ஏற்றுக்கொண்ட காதலன், திருமணத்திற்காக என சில நிபந்தனைகள் விதித்ததாக தெரியவருகிறது. அதன்படி, சீக்கிய பெண்மணி முஸ்லீம் மதத்திற்கு மாற வேண்டும் என கூறியுள்ளார்.
நாளொன்றுக்கு 5 முறை அல்லாஹ்வை தொழுகை வேண்டும், பர்கா அணிய வேண்டும், உன் சொந்த மதத்தை விட்டு வெளியேறி இஸ்லாமிய மதத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். மதமாற்றத்தின் மீது விருப்பம் இல்லாத பெண்மணி, நான் சீக்கியராக பிறந்தேன், அப்படியே இறக்க விரும்புகிறேன், காதலிக்கும்போது நாம் மதங்களை கடந்து மனத்தால் இணைந்தோம் என்று கூறியுள்ளார்.
காதலியின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாத அஜ்மத் அலி கான், தொடர்ந்து தனது காதலியை மதம் மாற வற்புறுத்தியுள்ளார். பல நேரங்களில் மிரட்டல் வந்துள்ளது. இதனால் காதலனிடம் இருந்து பெண்மணி விலக தொடங்கியுள்ளார். அவ்வப்போது காதலிக்கு தொடர்பு கொண்டு மதம் மாற வேண்டும், இல்லையேல் நாம் தனிமையில் எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவேன் என மிரட்டி இருக்கிறார்.
அஜ்மத் அலிகானின் மிரட்டலுக்கு பயம் கொள்ளாத பெண்மணி தொடர்ந்து தனது பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். ஆண்டுகள் கடந்தாலும் அஜ்மத்தின் நடவடிக்கை மாறாமல் தொல்லைகள் தொடர்ந்துள்ளது. கடந்த ஆண்டு காதலியை நேரில் சந்தித்த அஜ்மத், நீ மதம் மாறவில்லை என்றால் ஆசிட் தாக்குதல் நடத்தி கொலை செய்திடுவேன் என மிரட்டி இருக்கிறார். Mumbai Minor: சத்ரபதி சிவாஜி குறித்து அவதூறு தகவலை பதிவிட்ட சிறுவன் கைது; மும்பை காவல்துறை அதிரடி.!
இதற்கிடையில், கடந்த ஏப்ரல் 1ம் தேதி காதலியை நேரில் சந்தித்த அஜ்மத் அலி கான், உனக்கான காலக்கெடு முடிந்துவிட்டது. பதில் 2 நாட்களுக்கு வரவில்லை என்றால், நாம் எடுத்த தனிமை புகைப்படங்களை வெளியிடுவேன் என மிரட்டி இருக்கிறார். அதற்கு பெண்மணி பயம் கொள்ளாத நிலையில், அவை பொதுவெளியில் வெளியாகியுள்ளது. பெண்மணி தாக்கவும் செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்மணி டாபிரி (Dabri Police Station) காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். வழக்குப்பதிவு ஏதும் செய்யவில்லை என உள்ளூர் தகவல் தெரிவிக்கின்றன. ஏனெனில் பெண்மணி லவ் ஜிகாத் தொடர்பான புகார் வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)