Arvind Kejriwal To Be Arrested By ED Today: கைது செய்யப்படுகிறாரா அரவிந்த் கெஜ்ரிவால்? டெல்லியில் பரபரப்பு..!

அமலாக்கத்துறை 3 முறை சம்மன் அனுப்பியும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகத நிலையில், இன்று அவர் கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Delhi CM Arvind Kejriwal (Photo Credit: @ANI X)

ஜனவரி 04, புதுடெல்லி (New Delhi): டெல்லியில் ஆம்ஆத்மி ஆட்சியில் முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். டெல்லியில் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பரில், புதிய மதுபான கொள்கை அமல்படுத்தப்பட்டது. இந்த கொள்கையின் படி, 32 மண்டலங்களாக டெல்லியை பிரித்தனர். மேலும் அங்குள்ள 849 சில்லறை விற்பனை நிலையங்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. இதில் ரூ.100 கோடிக்கும் மேல் முறைகேடு நடைபெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது.

கைது செய்யப்படுகிறாரா அரவிந்த் கெஜ்ரிவால்?: இதையடுத்து ஆளுநர் விகே சக்சேனா சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். சிபிஐ விசாரணை தொடங்கிய நிலையில் டெல்லி அரசு புதிய மதுபான கொள்கையை திரும்ப பெற்றது. மேலும் அந்த சமயம் புதிய மதுபான கொள்கை ஊழலில் ஆம் ஆத்மி தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதாக கண்டறியப்பட்டது. Ban on Consumption of Liquor & Non-Veg: ராமர் கோவில் திறப்பு விழா அன்று இறைச்சி சாப்பிட, மதுபானம் அருந்த தடை: பாஜக எம்.எல்.ஏ கோரிக்கை.!

இதையடுத்து, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால் தேர்தல் பிரசாரத்தை காரணம் காட்டி அவர் ஆஜராகவில்லை. மேலும் கடந்த மாதம் டிசம்பர் 21 ஆம் தேதி சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. அப்போதும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. மூன்றாவது முறையாக நேற்று ஆஜராகுமாறு கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. அதற்கும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.

இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் இன்று கைது செய்யப்படலாம் என்று ஆம் ஆத்மி தலைவர்கள் பலர் தங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர். அதனைத் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் காவல்துறையினர் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் டெல்லி முழுதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.