BJP MLA Ram Kadam | Ayodhya Ram Mandir (Photo Credit: @ANI / @Mumbaikhabar9 X)

ஜனவரி 03, அயோத்தி (Ayodhya): உத்திரப்பிரத்தேசம் மாநிலத்தில் உள்ள அயோத்தி நகரில், ரூ.1,800 கோடி செலவில் பிரம்மாண்டமாக ஸ்ரீ ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோவில் பலகட்ட போராட்டங்களுக்கு பின்னர் அமைக்கப்படுகிறது. கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 05ம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகளை தொடங்கி வைத்து, தற்போது பிரம்மாண்டமாக கும்பாவிஷேக பணிகள் 22 ஜனவரி 2024 அன்று நடைபெறுகிறது.

விழாக்கோலம் பூண்டுள்ள அயோத்தி (Ayodhya Ram Mandir) மாநகரம்: இதற்காக இந்தியாவில் உள்ள பல பிரபலங்கள் நேரில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அயோத்திக்கு சென்று வர சிறப்பு இரயில்கள், விமானங்கள் ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ராமர் கோவில் கும்பாவிஷேக பணிகள் வெகுவிமர்சையாக நடைபெறும் என்பதால், தற்போதில் இருந்தே பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அயோத்தி நகரமும் விழாக்கோலம் பூண்டுள்ளது. Former Model Divya Pahuja Killed: முன்னாள் மாடல் திவ்யா பகுஜா கொலை… மூன்று பேர் கைது..! 

மறுசீரமைப்புடன் புத்துயிர் பெற்ற நகரம்: அயோத்தி நகரம் முழுவதும் மறுசீரமைப்பு செய்யப்பட்டு சர்வதேச விமான நிலையம், இரயில் நிலையம் ஆகியவை கட்டப்பட்டுள்ளன. இதனால் புதுப்பொலிவுபெற்ற அயோத்தி நகரில், இன்றில் இருந்து பக்தர்கள் ராம ஜென்மபூமியில் குவிந்து வருகின்றனர். இந்நிலையில், ராமர் கோவில் கும்பாவிஷேகத்தினை முன்னிட்டு, மதுபானக் கடைகள் திறக்கவும், அசைவ உணவுகளை சாப்பிடவும் தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

அசைவ உணவுகள், இறைச்சி சாப்பிட தடை: மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, காட்கோபர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ராம் கதம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். பாஜகவின் செய்தி தொடர்பாளராகவும் பணியாற்றி வரும் ராம் கதம், ராமர் கோவில் திறப்பு மற்றும் கும்பாவிஷேக பணிகளை முன்னிட்டு, இறைச்சி வகை உணவுகளை சாப்பிடவும், மதுபானங்கள் அருந்தவும் தடை விதிக்க வேண்டும் என மாநில அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

ஏக்நாத் ஷிண்டே தலைமையில் செயல்பட்டு வரும் மகாராஷ்டிரா மாநில அரசு, தற்போது வரை இவ்விவகாரம் குறித்து எந்த விதமான பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.