Techie Suicide: பெங்களூர் ஐடி ஊழியர் தற்கொலை விவகாரம்; மனைவி, மாமியார், மச்சான் அதிரடி கைது.!
2019ல் திருமணம், 21ல் மணமுறிவு, 24ல் தற்கொலை என ஐடி ஊழியரின் வாழ்க்கை 5 ஆண்டுகளில் மிகப்பெரிய துயரத்தை எதிர்கொண்டு, தற்கொலை செய்து உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.
டிசம்பர் 15, பெங்களூர் (Bangalore News): பீகார் மாநிலத்தில் உள்ள சமஸ்திபூர் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்டவர் 34 வயதுடைய அதுல் சுபாஷ் (Atul Subhash). இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு, தனக்கு இணையதள மேட்ரிமோனி வாயிலாக அறிமுகமாகியிருந்த நிகிதா சிங்கனியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின் தம்பதிகளுக்கு ஒரு குழந்தை பிறந்த நிலையில், கடந்த 2021 ஆம் ஆண்டு இவர்களுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.
தம்பதிகள் பிரிவு:
தனது குழந்தையுடன் நிகிதா தாய் வீட்டிற்கு சென்றுவிட்ட நிலையில், தனது கணவரான அதுலிடமிருந்து தொழில் செய்ய வேண்டுமென பணம் கேட்டு இருக்கிறார். இந்த விஷயம் தொடர்பாக இருந்த கருத்து முரண்பாடு காரணமாக இருவரும் பிரிந்ததாக கூறப்படும் நிலையில், பிரிவுக்குப் பின்னர் கடந்த மூன்று ஆண்டுகளாக அதுலை, நிகிதா மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து அதிக துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி இருக்கின்றனர். கள்ளக்காதலுக்கு மாமியார் இடையூறு.. தோழி, கள்ளக்காதலனுடன் சேர்ந்து மருமகள் வெறிச்செயல்.. விசாரணையில் பகீர் திருப்பம்.!
பொய்யான புகார்கள்:
குறிப்பாக வரதட்சணை கொடுமை என வழக்கு தொடுத்து, அவரை அலைக்கழித்து இருக்கின்றனர். ரூபாய் 3 கோடி இழப்பீடு கேட்டும் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. மாதம் 80 ஆயிரம் ஜீவனாம்ச தொகையாக வழங்கப்பட்ட போதிலும், தனக்கு அந்த தொகை கூடுதலாக வேண்டும் என தகராறு நடந்துள்ளது. இவ்வாறாக மூன்று ஆண்டுகளாக பல துயரங்களை எதிர்கொண்ட அது அதுல் சுபாஷ், கடந்த திங்கட்கிழமை பெங்களூரில் தான் தங்கியிருந்த வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.
பதறவைத்த தற்கொலை குறிப்பு:
தற்கொலைக்கு முன்னதாக சுமார் 80 நிமிட வீடியோ மற்றும் 24 பக்க தற்கொலை கடிதத்தையும் அவர் பதிவு செய்துள்ளார். இந்த கடிதத்தின் ஒவ்வொரு பக்கத்திலும், "எனக்கு நீதி வேண்டும்" என்ற வாசகங்கள் முதலில் இடம் பெற்றுள்ளது. அவர் தனது மனைவி நிகிதா, அவரின் தாய் நிஷா, நிகிதாவின் சகோதரர் அனுராக் மற்றும் இவர்களின் மாமா சுசில் ஆகியோர் மீது குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
குற்றவாளிகள் கைது:
அதுல் சுபாஷின் தற்கொலைக்குப் பின்னர், அவருக்கு நீதி வேண்டும் என்ற குரல் சமூக வலைத்தளங்களில் எதிரொலித்தது. காவல்துறையினர் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதனைத்தொடர்ந்து, வரதட்சணை கொடுமை, பெண் பாதுகாப்பு போன்ற சட்டங்களை நிகிதா மற்றும் அவரது குடும்பத்தினர் தவறாக பயன்படுத்தியது அம்பலமானது. இதனால் அதுலை தற்கொலைக்கு தூண்டியதாக குற்றவாளிகளான நிகிதா, அவரின் தாய் மற்றும் சகோதரர் ஆகியோர் குருகிராம் மற்றும் அலகாபாத்தில் வைத்து தனித்தனியாக கைது செய்யப்பட்டனர். இவர்களின் மாமா சுசில் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரையும் கைது செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தற்கொலைக்கு முன்னதாக அதுல் சுபாஷ் பதிவு செய்த காணொளி & கடிதம் உங்களின் பார்வைக்கு:
தற்கொலை தடுப்பு மற்றும் மனநல உதவி எண்கள்:
டெலி மனாஸ் (Tele Manas) சுகாதார அமைச்சகம் - 14416 அல்லது 1800 891 4416; நிம்ஹான்ஸ் (NIMHANS) + 91 80 26995000 / 5100 / 5200 / 5300 / 5400; பீக் மைண்ட் (Peak Mind) - 080 456 87786; வந்த்ரேவாலா அறக்கட்டளை - 9999 666 555; அர்பிதா தற்கொலை தடுப்பு உதவி எண் - 080-23655557; iCALL - 022-25521111 மற்றும் 9152987821; COOJ மனநல அறக்கட்டளை - 0832-2252525, தற்கொலை தடுப்பு மையம் கோயம்புத்தூர் - 0422-2300999, சினேகா தற்கொலை தடுப்பு மையம் சென்னை - +91 44 2464 0060 மற்றும் +91 44 2464 0050..
ஆண்கள் உதவி எண்கள்:
மிலாப்: 9990588768; அகில இந்திய ஆண்கள் உதவி எண்: 9911666498; ஆண்கள் நல அறக்கட்டளை: 8882498498; வாஸ்தவ் அறக்கட்டளை: 8424026498.