Bomb Threats to Schools: 40 பள்ளிகளுக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்; காவல்துறை தீவிர சோதனை.!
இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டிசம்பர் 09, டெல்லி (Delhi News): இந்தியாவின் தலைநகரான டெல்லியில் சட்டம் (Delhi Law & Order) ஒழுங்கு என்பது மிகப்பெரிய சவாலான விஷயமாக இருக்கிறது. மாநில அரசு - மத்திய அரசு மோதல், விவசாயிகள் போராட்டம், அண்டை மாநிலங்களில் விவசாய கழிவுகள் எரிப்பு காரணமாக காற்று மாசு (Delhi Air Pollution), நதிநீர் மாசுபாடு என அங்குள்ள மக்கள் பல துயரங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இதனுடன் சட்டம் ஒழுங்கும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு சவாலான நிலைகளை வழங்குகிறது.
40 பள்ளிகளுக்கு (Delhi Schools) மிரட்டல்:
இதனிடையே, இன்று ஒரேநாளில் டெல்லி மாநிலத்தில் உள்ள 40 க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு, மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு (Bomb Threatening) மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. சனி, ஞாயிறு விடுமுறையை முடித்துக்கொண்டு, இன்று மாணவர்கள் பலரும் பள்ளிகளுக்கு திரும்பி இருந்தனர். அப்போது, பள்ளியின் நிர்வாகத்திற்கு மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு (Bomb Threats to Schools Via Email) மிரட்டல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. Chennai to Kochi Flight: சென்னை - கொச்சி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு; 90 பயணிகளின் உயிர் தப்பியதால், நிம்மதி பெருமூச்சு.!
30 ஆயிரம் அமெரிக்க டாலர் பணம் கேட்டு மிரட்டல்:
சுமார் 40 க்கும் மேற்பட்ட பள்ளிகளின் மின்னஞ்சல் முகவரிக்கு, நேரடியாக மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு சுமார் 11:38 மணியளவில் பெறப்பட்ட மின்னஞ்சலின் பேரில், பள்ளி நிர்வாகத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மிரட்டல் மின்னஞ்சலில் மர்ம நபர், "30,000 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.2,541,750/-) பணம் தனக்கு வழங்கப்பட வேண்டும். இல்லையென்றால் டெட்டனேட்டர் கொண்டு வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடிக்கும்" என கூறியுள்ளார்.
காவல்துறை விசாரணை:
இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர், அனைத்து பள்ளிகளிலும் சோதனை மேற்கொண்டனர். சோதனையில் பள்ளிகளில் எந்த விதமான வெடிகுண்டும் இல்லை என்பது தெரியவந்தது. இதனால் சில பள்ளிகளுக்கு விடுமுறையும் அறிவிக்கப்பட்டது. காலை பள்ளியின் அலுவலக மின்னஞ்சலை திறந்து பார்த்து, பின் அவசர கதியில் ஒருசில பள்ளிகளில் இருந்து மாணவர்கள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மின்னஞ்சல் விடுத்த மர்ம நபர் குறித்து விசாரணை நடந்து வருகிறது.
மயுர் விகார் பகுதியில் இருக்கும் பள்ளியில், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து ஆய்வு செய்யும் அதிகாரிகள்:
40 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம்: