One Nation One Election: ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவில் பின்னடைவு? கூட்டுக்குழுவுக்கு அனுப்ப ஆதரவு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!
எலக்ட்ரானிக் முறையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா கூட்டுக்குழு பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 17, பாராளுமன்றம் (Delhi News): தலைநகர் டெல்லியில், குளிர்கால மக்களவை கூட்டத்தொடர் (Parliament Meeting 2024) நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் காங்கிரஸ் (Congress Party) அதானி விவகாரம் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து கேள்விகளை மத்திய அரசுக்கு (Govt of India) எதிராக முன்வைத்து வாதம் செய்தது. இதனால் பல சமயங்களில் அவை செயல்பாடுகள் முடங்கி, சபாநாயகர் அவை செயல்பாடுகளை ஒத்திவைத்து இருந்தார்.
மத்திய அமைச்சரவை ஒப்புதல்:
இந்நிலையில், இன்று மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புகளுக்கு பின்னர் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையும் ஒப்புதல் வழங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
அரசியலமைப்பில் மாற்றம்:
இந்த சட்டத்திற்கு அரசியலமைப்பு சட்டத்திலும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திலும் மாற்றங்கள் செய்யப்படும். 83, 85(2), 85(2)b, 174, 356, 75(3) உட்பட பல பிரிவுகளில் மாற்றங்கள் வரும். ஒரே நாடு ஒரே தேர்தல் சட்டத்திற்கு மூன்றில் 2 பங்கு ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டால், அது ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, அனுமதி வழங்கப்பட்டு நிறைவேற்றப்படும். குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவர் ஒப்புதல் வழங்கியதும் சட்டம் அமல்படுத்தப்படும். பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் இம்மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாஜக தரப்பு விளக்கம்:
மசோதா குறித்து பாஜக தரப்பு கூறுகையில், காங்கிரஸ் நாட்டின் வளர்ச்சிக்கு எதிரான முடிவை எடுக்கிறது. ஒரே நாடு ஒரே தேர்தல் காரணமாக, அரசின் செலவினங்கள் பெருவாரியாக குறையும், வாக்குப்பதிவு அதிகரிக்கும். இந்த சட்டம் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமானது. மக்கள் நலத்திட்டங்களை அமல்படுத்த எதுவாக இருக்கும் என பாஜக தரப்பில் வாதம் முன்வைக்கப்படுகிறது. Alien EMO Tattoo: நாக்கை அறுத்து, கண்களில் ஊசி செலுத்தி நிறம் பூசும் டாட்டூ; விசமத்தனமான செயலை மேற்கொண்ட 2 இளைஞர்கள் கைது.!
காங்கிரஸ் தரப்பு எதிர்ப்பு:
அதேநேரத்தில் காங்கிரஸ், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா, இந்தியாவின் அரசியல் சாசனம் மீதான தாக்குதல் ஆகும். மாநிலத்திற்கு உரிய அதிகாரம் பறிக்கப்படும். நாடாளுமன்றத்தின் அதிகம் ஓங்கி, மாநில அங்கீகாரம் கேள்விக்குறியாகும். கூட்டாட்சி தத்துவம் சிதைக்கப்படும். மசோதாவை உடனடியாக திரும்ப பெற வேண்டும். அரசியல் அடிப்படையில் மாற்றம் செய்யப்படுவது தவறானது என தெரிவிக்கப்படுகிறது.
அமித் ஷா ஆவேசம்:
மசோதா குறித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டாலும், அதனை எதிர்பார்த்து காங்கிரஸ் வழக்கம். சட்டத்துறை அமைச்சர் விரும்பினால், அவர் ஒப்புக்கொண்டால், ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை, சட்டக்குழுவுக்கு அனுப்பலாம் என பேசினார்.
கூட்டுக்குழுவுக்கு அனுப்ப ஆதரவு:
ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை கூட்டுக்குழுவுக்கு அனுப்ப 220 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்த நிலையில், 149 உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மொத்தமாக 369 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். கூட்டுக்குழுவின் வாதத்திற்கு பின்னர், மாற்றங்கள் செய்யப்பட்ட பின்னர், மீண்டும் மசோதா தாக்கல் செய்யப்பட்டு வாக்கெடுப்பின் பேரில் நிறைவேற்றப்படும்.
முக்கியமாக ஆட்சி பெற்ற 6 மாதத்தில், ஒரு மாநிலத்தில் ஆட்சி இழப்பு நடந்தால் அரசு எடுக்கும் நடவடிக்கை என்ன? உட்பட சில விஷயங்களில் கருத்துக்கள் வேறுபடுவதால், நாடாளுமன்ற கூட்டுக்குழு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கூட்டுக்குழுவில் அனைத்துக்கட்சி உறுப்பினர்களும் இடம்பெற்று இருப்பார்கள். அவர்களின் கருத்துக்கேற்ப சரத்துகள் மாற்றம் செய்யப்பட்டு, நாடாளுமன்றத்தில் மீண்டும் மசோதா அறிமுகம் செய்யப்படும்.
பாஜகவுடன் ஜனதா தல், தெலுங்கு தேசம் உட்பட பல கட்சிகள் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். காங்கிரஸ், சமாஜ்வாதி, திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உட்பட இடதுசாரி அமைப்புகள் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளது.
திமுக எம்.பி டி.ஆர் பாலு, ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து உரையாற்றிய காணொளி: