Surat-Bangkok Flight: 4 மணிநேர பயணத்தில் 15 லிட்டர் சரக்கை காலி செய்த குடிமகன்கள்.. வீடியோ வைரல்..!

சூரத்-பாங்காக் விமான பயணிகள் 4 மணிநேர பயணத்தில் சுமார் 15 லிட்டர் மதுவை குடித்து முடித்துள்ளனர்.

Surat Bangkok flight runs out of Liquor (Photo Credit: @MrSinha_ X)

டிசம்பர் 23, சூரத் (Gujarat News): குஜராத் மாநிலம், சூரத்தில் இருந்து தாய்லாந்து தலைநகர் பாங்காக் செல்லும் (Surat-Bangkok) விமானத்தில், பயணிகள் 4 மணிநேர பயணத்தில் மொத்த மதுவையும் குடித்துள்ளனர். சுமார் 300க்கும் மேற்பட்ட பயணிகள் ரூ.1.80 லட்சம் மதிப்புள்ள 15 லிட்டர் மது அருந்தியதாக (Alcohol) கூறப்படுகிறது. மேலும், கமான் மற்றும் தெப்லா போன்ற பிரபலமான குஜராத்தி தின்பண்டங்கள் அனைத்தையும் பயணிகள் விரும்பி சாப்பிட்டுள்ளனர். Sunny Leone Scheme: சன்னி லியோனுக்கு மாதம் ரூ. 1000 உதவித்தொகை.. மஹ்தாரி வந்தன் யோஜனா திட்டத்தின் மாஸ் செயல்..!

காலியான மதுபாட்டில்கள்:

இதுதொடர்பாக, எக்ஸ்-யில் பகிரப்பட்ட காணொளியில் பயணிகள் காலியான மதுபான பாட்டில்களை புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளனர். அதில், 'சூரத்தில் இருந்து பாங்காக் நோக்கி விமானம் இன்று (டிசம்பர் 22) புறப்பட்டன. விமானத்தில் பயணிகள் 15 லிட்டர் மது அருந்தினர். மேலும் விமானம் பாங்காக் சென்றடையும் முன்பே மது தீர்ந்துவிட்டது. நான்கு மணிநேர பயணத்தில் 300 பயணிகள் ரூ.1.8 லட்சம் மதிப்பிலான மதுவை உட்கொண்டனர். அவர்கள் அனைத்து சிற்றுண்டிகளையும் கூட சாப்பிட்டு முடித்தனர்' என்று பதிவிடப்பட்டிருந்தது.

வீடியோ இதோ: