Sunny Leone (Photo Credit: Instagram)

டிசம்பர் 23, ராய்ப்பூர் (Chhattisgarh News): சத்தீஸ்கர் மாநில அரசு மஹ்தாரி வந்தன் யோஜனா எனும் திட்டத்தை நடத்தி வருகிறது. இத்திட்டமானது கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை திட்டத்தினை போன்றது. இத்திட்டத்தின் படி திருமணம் ஆன பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கிடைக்கும். மேலும் இந்தத் திட்டத்தில் அதிகமான சொத்து வைத்திருப்போர்க்கு பணம் கொடுக்கப்படாது. இருந்தபோதிலும் பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் (Sunny Leone) இந்தத் திட்டத்தினால் மாதம் ஆயிரம் ரூபாய் பெற்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்த்து பலர் கேள்வி எழுப்பினர். Assam Earthquake: அசாம் மாநிலத்தில் மிதமான நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 3.5 புள்ளிகளாக பதிவு.!

சன்னி லியோனுக்கு உதவித்தொகை:

இந்த விஷயம் ஆளும் பாஜக காதிருக்கும் சென்றது. இதனை அடுத்து நடத்திய விசாரணையில் விரேந்திர ஜோஷி என்பவர் தான் சன்னிலியோன் பெயரில் விண்ணப்பித்து மாதம் ஆயிரம் ரூபாயை பெற்று வந்தது தெரிய வந்தது. இவர் வங்கி கணக்கை முடக்குமாறு பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு துறைக்கு மாவட்ட ஆட்சியர் ஹாரிஸ் உத்தரவிட்டுள்ளார். மேலும் சரியாக விசாரிக்காமல் விரேந்திர ஜோிஷிக்கு உதவித்தொகை வழங்கிய அதிகாரிகள் யார், யார் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.