Napkin Dangerous Chemicals: நாப்கினில் ஆபத்தான ரசாயனங்கள்.. பெண்களே உஷாராக இருங்கள்.. பதறவைக்கும் தகவல்.!
மாதவிடாய் சுழற்சியின் போது உபயோகம் செய்யப்படும் நாப்கினில் ஆபத்தான ரசாயனங்கள் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.
டிசம்பர், 11: மாதவிடாய் (Periods / Menstruation) சுழற்சியின் போது உபயோகம் செய்யப்படும் நாப்கினில் (Napkin) ஆபத்தான ரசாயனங்கள் (Hazard Chemicals) உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது. டெல்லியில் செயல்பட்டு வரும் சுற்றுசூழல் தன்னார்வ நிறுவனம் நடத்திய ஆய்வுகளில், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் பிரபலமான நாப்கின்களில் நீரழிவு நோய், இதயக்கோளாறு, புற்றுநோய் ரசாயனங்கள் (Diabetes, Heart Problem, Cancer) இருப்பது உறுதியானது.
இந்திய சந்தைகளில் விற்பனை செய்யப்படும் 6 சாதாரண நாப்கின்கள், 4 ஆர்கானிக் நாப்கின்கள் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டன. இவற்றில் பென்செண்டிகார்பாக்சிலிக் அமில எஸ்டர்கள் இருப்பது உறுதியானது. பென்செண்டிகார்பாக்சிலிக் பித்தலேட்டுகள் ஆவியாகும் கரிம சேர்மங்கள் ஆகும்.
பித்தலேட்டுகள் இதயம் & இனப்பெருக்க அமைப்பு பாதிப்புகள், நீரிழிவு புற்றுநோய்கள், பிறப்பு குறைபாடுகள் போன்ற உடல் நல பிரச்சனையோடு தொடர்புள்ளது ஆகும். Volatile Organic Compounds வெளிப்பாடு ஆஸ்துமா, மூளை குறைபாடு, இனப்பெருக்க அமைப்பு செயல்பாடுகளின் அபாயத்தை அதிகரிக்கிறது. PesticidesCaution: அச்சச்சோ… பூச்சிக்கொல்லி எச்சங்கள் கலந்த காய்கறி, பழங்களால் கர்ப்பகால பேராபத்து.. உயிருக்கு உலைவைக்கும் கொல்லிகள்.!
அதேபோல, இயற்கையானது என்று கூறப்படும் ஆர்கானிக் சானிட்டரி நாப்கினிலும் அதிகளவு பித்தலேட்டுகள் இருக்கின்றன. 25 ஆவியாகும் சேர்மங்கள், அசோடின், குளோரோபார்ம், பென்சீன், டோலுயின் போன்ற வேதிப்பொருட்களும் இருந்துள்ளன. நாப்கின்களில் நறுமணத்திற்காக சேர்க்கப்படும் வேதிப்பொருட்கள் காரணமாக ஆரோக்கிய குறைபாடுகளும் ஏற்படுகின்றன.
இன்றுள்ள காலங்களில் சானிட்டரி நாப்கினின் பயன்பாடு தவிர்க்க இயலாத ஒன்றாகிவிட்டதால், அதனை முற்றிலும் தவிர்ப்பது சாத்தியமில்லாத கூற்றாயிற்று. ஆகையால், மாதவிடாய் நாட்களில் வீட்டில் இருக்கும் பெண்கள் பருத்தி துணியை உபயோகம் செய்வது நல்லது.
இதனை மீண்டும் சுத்தம் செய்து நாம் உபயோகம் செய்துகொள்ளலாம். தொடையில் அரிப்பு, எரிச்சல், யோனியில் தொற்று போன்றவை ஏற்படாமல் அது பார்த்துக்கொள்ளும். ஒவ்வொரு முறை பருத்தி துணியை உபயோகம் செய்த பின்னரும், அதனை சூடான நீரில் அலசி கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து 3 மாதங்கள் வரை மீண்டும் உபயோகம் செய்யலாம்.