PM Narendra Modi About Sengol: செங்கோலை பெற்று புதிய உத்வேகத்துடன் பேசிய பிரதமர் மோடி; நடுநடுங்கப்போகும் எதிரிகள்..!
முன்னாள் பிரதமர் நேருவின் வீட்டில் செங்கோல் சுதந்திரத்திற்கு பின்னர் வால்கிங் ஸ்டிக்காக இருந்தது என காங்கிரஸ் கட்சியை பிரதமர் கடுமையாக சாடினார்.
மே 27, புதுடெல்லி (Parliament India): 1947-க்கு முன் ஆங்கிலேயர் அமைத்த பாராளுமன்றத்தை விடுத்தது, 100 ஆண்டுகள் கழித்து இந்தியர்களால் இந்தியாவுக்கென பாராளுமன்றம் (New Parliament India) அமைக்கப்பட்டுள்ளது. 64,500 சதுர மீட்டர் பரப்பு பாராளுமன்றம், ரூ.862 கோடி செலவில் கட்டப்பட்டது.
லோக் சபாவில் 1,272 பேர் அமரும் இருக்கையும், ராஜ்ய சபாவில் 384 பேர் அமரும் வகையில் இருக்கையும் உள்ளன. சென்ட்ரல் ஹால் விசாலமாக அமைக்கப்பட்டுள்ளது. இன்று புதிய பாராளுமன்றம் திறக்கப்பட்டு, சோழர்களின் செங்கோல் (Chozha's Sengol) நாடாளுமன்ற சபாநாயர் முன்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பார்க்கும் வகையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்று ஆதீனம் மற்றும் சிவனடியார்களிடம் இருந்து செங்கோலுடன் ஆசியையும் சேர்த்து பெற்றுக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi), அவர்களிடையே உரையாடினார். அப்போது, அவர் பேசுகையில், Parliament India: உலகிலேயே 4வது மிகப்பெரிய பாராளுமன்றத்தை கொண்ட இந்தியா; 105 ஆண்டுகள் கழித்து சாதனை படைத்த இந்தியா.!
"உங்கள் அனைவரையும் நான் வணங்கி வாழ்த்துகிறேன். எனது இல்லத்திற்கு நீங்கள் வந்து எனது அதிஷ்டம். சிவபெருமானின் ஆசியால் சிவபக்தர்களாகிய உங்களின் தரிசனம் எனக்கு கிடைத்தது. சுதந்திரத்திற்கு பின்பு புனிதமான செங்கோலுக்கு உரிய மரியாதையை கொடுத்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
இந்த செங்கோலை ப்ரயாக்ராஜ் ஆனந்த பவனில் வாக்கிங் ஸ்டிக்காக காட்சிக்கு வைத்திருந்தார்கள். சிவனடியார்களாக நீங்களும், எங்கள் அரசும் செங்கோலை ஆனந்த பவனில் இருந்து வெளியே கொண்டு வந்துள்ளார்கள்.
இந்தியா ஒன்றுபட்டு இருக்கும் அளவு வலுப்பெறும். வளர்ச்சிக்கான நமது பாதையில் தடையை ஏற்படுத்துவோர் பல சவால்களை முன்வைப்பார்கள். இந்தியாவுக்கான முன்னேற்றத்தை சகிக்க இயலாத நபர்கள் ஒற்றுமையை உடைப்பார்கள். அதற்கான முயற்சி மேற்கொள்வார்கள். ஆன்மீகத்தின் வலிமை எவ்வகை சவாலையும் எதிர்கொள்ள உதவும் என நான் நம்புகிறேன்" என பேசினார்.