Rajasthan CM on Rape Accuse: கற்பழிப்பு குற்றவாளிகளுக்கு இனி அரசு வேலை இல்லை; ராஜஸ்தான் மாநில முதல்வர் அதிரடி அறிவிப்பு.!
பாலியல் குற்றங்களை குறைக்க அரபு நாடுகளை போல கடும் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என பல ஆண்டுகளாய் கோரிக்கை இருந்து வந்தாலும், அவை அமல்படுத்தப்படாததால் குற்றங்கள் தொடரத்தான் செய்கிறது.
ஆகஸ்ட் 08, ஜெய்பூர் (Rajasthan News): இந்தியாவில் நாளொன்றுக்கு 80 க்கும் அதிகமான பெண்கள் பாலியல் பலாத்காரம் உட்பட பெண் வன்கொடுமை பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். இவர்களில் பலாத்காரம் தொடர்பான குற்றங்களை எதிர்கொள்ளும் பெண்கள் பெருமளவு வெளியே சொல்வது இல்லை.
அவை நாளடைவில் தெரியவருகிறது அல்லது சில வழக்குகள் புகார் பதிவு செய்யப்படாமலேயே இருக்கிறது. பாலியல் வழக்குகளில் சிறுமிகள் முதல் வயோதிக பெண்கள் வரை பாதிக்கப்படுகின்றனர். இவ்வாறான வழக்குகளுக்கு கடும் தண்டனை வேண்டும் என பலதரப்பு ஆண்டாண்டுகளாய் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
சமீபத்தில் மணிப்பூரில் 2 பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டனர். இவைபோன்று பல குற்றங்கள் தொடர்ந்து வருகிறது. Bus Accident: தனியார் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து; 2 பேர் பலி., 20 பேர் படுகாயம்.!
ராஜஸ்தான் மாநிலத்தை பொறுத்தமட்டில் 2021ம் ஆண்டு பதிவேடுகளின்படி 6 ஆயிரத்திற்கும் அதிகமான வழக்குகள் ஒரே ஆண்டில் பதிவாகியுள்ளது. இன ரீதியான பாகுபாடு கொண்டும் பாலியல் வன்முறைகள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அம்மாநிலத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் அதற்கான தேர்வு எழுதுவோர் பாலியல் வழக்கில் சிக்கியவராக இருந்தால், அவர்களின் அரசு பணிக்கான தடை விதிக்கப்படும் என அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.