Subrata Roy: 12 இலட்சம் பணியாளர்கள்.. கால்பதிக்காத துறைகளே இல்லை: சகாரா குழுமத்தின் நிறுவனர் மறைவு.. யார் இந்த சுப்ரதா ராய்?..!

செல்வந்த குடும்ப பின்னணியைக்கொண்ட ராய் கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் Holy Child Institute-ல் மெக்கானிக்கல் துறையில் பயின்று, கோரக்பூரில் தனது முதல் வணிக ரீதியான நிறுவனத்தை தோற்றுவித்தார்.

Subrata Roy Sahara Group Founder (Photo Credit: X)

நவம்பர் 15, மும்பை (Mumbai): இந்திய அளவில், மத்திய இரயில்வே துறைக்கு அடுத்தபடியாக, மிகப்பெரிய பணியாளர்களை வைத்து செயல்பட்டு வந்த தனியார் நிறுவனம் சகாரா குழுமம். இக்குழுமம் இந்தியா மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் தொழில் செய்து வருகிறது.

நிதி நிறுவன சேவை, கட்டுமான பணிகள், பொழுதுபோக்கு ஊடகம், பத்திரிகை தொலைக்காட்சி, ரியல் எஸ்டேட், விளையாட்டு, மின்சாரம், உற்பத்தி, டிஜிட்டல் கல்வி, இ-வணிகம், இ-வாகனங்கள், மருத்துவம், காப்பீடு, செயற்கை நுண்ணறிவு இயந்திரம், பொருட்கள் விற்பனை, தகவல் தொழில்நுட்பம் என பன்முகத்தன்மை கொண்ட பணிகளை திறம்பட செய்து வருகிறது.

கிட்டத்தட்ட 12 இலட்சத்திற்கும் அதிகமான பணியாளர்கள் சகாரா குழுமத்திடம் நேரடியாகவும், ஒப்பந்த பணியாளர்களாகவும் வேலைபார்த்து வருகின்றனர். இந்நிறுவனத்தை கடந்த 45 ஆண்டுகளுக்கு முன்பு, 1978-ல் சுப்ரதா ராய் தோற்றுவித்தார்.

45 ஆண்டுகளை கடந்து இந்தியாவில் மிகப்பெரிய நிறுவனமாக இறக்கும் சகாரா, இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் முதன்மை நிறுவனங்களில் ஒன்றாகும். இந்நிறுவனத்தின் நிறுவனர் சுப்ரதா ராய், கடந்த ஜூன் 10ம் தேதி 1948ல் பீகார் மாநிலத்தில் உள்ள ஆரரியா மாவட்டத்தில் பிறந்தார். Threads New Feature Update: பயனர்கள் தங்களின் திரெட்ஸ் கணக்கை நீக்குவது எப்படி?.. விபரம் அறிவிப்பு..! 

தற்போது மும்பையில் குடும்பத்துடன் வசித்து வரும் அவர், 75 வயதில் ஏற்பட்ட உடல்நல பிரச்சனை மற்றும் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதியாகி, நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

செல்வந்த குடும்ப பின்னணியைக்கொண்ட ராய் கொல்கத்தாவில் செயல்பட்டு வரும் Holy Child Institute-ல் மெக்கானிக்கல் துறையில் பயின்று, கோரக்பூரில் தனது முதல் வணிக ரீதியான நிறுவனத்தை தோற்றுவித்தார்.

1976-வாக்கில் நலிவுற்று கிடந்த சிட்பண்ட் நிறுவனத்தை வாங்கி, திறம்பட நிர்வாக பணிகளை மேற்கொண்டு வளர்ச்சியை கொடுத்த ராய், அடுத்தடுத்து பல பணிகளை, தனது சார்பில் குழு அமைத்து நிர்வகித்து உச்சத்தை அடைந்தார்.

தொழில் ரீதியாக பல்வேறு விமர்சனத்தை சந்தித்து, சில பிரச்சனைகளால் நீதிமன்றத்தை நாடி பல வழக்குகள் பெற்றாலும், இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்குகொண்ட குழுமமாக சகாரா இருந்து வந்தது. அதன் நிறுவனர் தனது வாழ்க்கை பயண ஓட்டத்தை இயற்கையின் கட்டாயத்தால் நிறுத்திக்கொண்டுள்ளார்.