Solution of Stress: மன அழுத்தத்தால் சமநிலையை இழக்கும் சமூகம்.. அதிகரிக்கும் கொலைகள் & தற்கொலைகள்.. தீர்வு என்ன?..!
அதற்கான அதிர்ச்சி காரணங்களும், தீர்வுகளும் உங்களுக்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.
டிசம்பர், 11: தனிமனிதனின் உயிர் (Human Life) விலைமதிக்க இயலாதது ஆகும். அதற்கு எதையும் சாதிக்கும் ஆற்றல் உண்டு.. ஒவ்வொரு தனிமனிதரும் தனக்குள் எதோ ஒரு திறமையை கொண்டுள்ளனர். அவற்றை கண்டறியும் நபர்கள் தங்களின் வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்கு செல்கின்றனர். எதிர்பாராத தருணங்களில் எடுக்கப்படும் முடிவுகள் வாழ்க்கையின் திசையையும் மாற்றும்.
எந்நிலையிலும் நிதானம், மன சமநிலையோடு செயல்படுவது முக்கியமான விஷயமாகும். நாம் பல நேரங்களில் வாழ்க்கையின் மாற்றங்கள் குறித்து அறிந்தாலும், நிதானம் இழந்து (Stress) ஆத்திரத்துடன் விரக்தியின் உச்சத்தில் செயலாற்ற தூண்டப்படுகிறோம். அவை மோசமான பின்விளைவுகளையும் ஏற்படுத்தும்.
நமது உயிரை துச்சமென எண்ணி மாய்துகொள்ளுதல் அல்லது பிறரின் உயிரை பறித்தல் என பல சோகங்களும் கொடூரங்களும் (Sucide & Murder) நடக்கிறது. இந்த நிலைமைக்கு முக்கிய காரணியாக உளவியல் சிக்கல் என்பது இருக்கிறது. குறிப்பிட்ட பிரச்சனையில் சிக்கி, அதில் மீள இயலாத நிலையிலியேயே விபரீத எண்ணங்கள் தோன்றி முடிவுகள் எடுக்கப்படுகின்றன.
இவ்வாறான முடிவுகள் தற்கொலையாக, கொலையாக அமைகிறது. இந்திய தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் ஆய்வுத்தரவுகளின் படி, உளவியல் சிக்கலை எதிர்கொள்ளும் நபர்கள் வேறுபட்ட பொருளாதார, சமூக, வாழ்வியல் நிலையில் இருக்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #PanAadharLink: பேன் – ஆதார் நம்பர் இணைப்பு இவ்வுளவு சுலபமானதா?.. இன்றே இணைத்திடுங்கள் மக்களே.!
இவர்களின் தவறுதலான முடிவு அவற்றின் உயிரை பறித்து, தனிப்பட்ட குடும்பத்தை மட்டுமல்லாது சமூகத்தையும் பாதிக்கிறது. அதன் தாக்கம் தவிர்க்க இயலாததாக மாறிவிடுகிறது என்று கூறுகிறது. இதனாலேயே கொலை, தற்கொலை போன்றவை நமது சமூகத்தில் தவிர்க்க இயலாத நோயாக மாறியுள்ளது.
கொலை & தற்கொலையின் வேகமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 2021ல் இலட்சம் பேரில் 26 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். மாநிலங்கள் வாரியாக மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மத்திய பிரதேசங்களில் அதிகம் மக்கள் தற்கொலை செய்து உயிரை மாய்த்துள்ளனர்.
கடந்த ஆண்டில் இந்தியாவில் 29,272 கொலைகள் நடந்துள்ளது. மாநிலங்கள் வாரியாக மத்திய பிரதேசம், பீகார், மராட்டியம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் முன்னிலையில் இருக்கிறது. தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குற்றங்கள் 6,064 நடந்துள்ளது. பெண்களுக்கு எதிராக 8,051 குற்றங்கள் நடந்துள்ளது.
18 வயது முதல் 45 வயது வரை உள்ள இளம் வயதினர் அதிகளவு தற்கொலை செய்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர். குழந்தைகளை கொலை செய்து தானும் தற்கொலை செய்யும் வழக்கமும் நடந்து வருகிறது. கல்வி, பொருளாதாரம் போன்ற போன்றவற்றில் மேம்பட்டு இருக்கும் மும்பையிலும் தற்கொலைகள் நடக்கின்றன.
குடும்ப பிரச்சனை, தனிமைப்படுத்தப்படுத்தல், தொழில் பிரச்சனை, தோல்வி, மது & போதைப்பழக்கம், உடல்நலம் சார்ந்த நோய் போன்றவையும் தற்கொலைக்கு பிற காரணியாக இருக்கிறது. எந்த பிரச்சனை வந்தாலும் உளவியல் ரீதியாக அதனை எதிர்கொண்டு நாம் வெற்றியடைய வேண்டும்.
அதுபோல, சமூகத்தின் மீதான ஆத்திரம் போன்றவை கொலை & கொள்ளை போன்றவற்றுக்கும் காரணமாக அமைகிறது. பிரச்சனைகளை எதிர்கொள்ள இளம் வயதினர் கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டும். நல்லது & கெட்டது தொடர்பாக ஆராய்ந்து கண்டறிய வேண்டும். கேட்பது கிடைக்க வேண்டும் & நினைப்பது நடக்க வேண்டும் என்பதை மாற்ற வேண்டும். #ApplyPanCardOnline: அடடே.. ஆன்லைனில் Pan Card விண்ணப்பிப்பது இவ்வுளவு எளிதா?.. உட்கார்ந்த இடத்தில் 5 நிமிடத்தில் முடியும் வேலை.!
நமது கடும் உழைப்பே உயர்வு தரும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். எந்த பிரச்சனையாக இருந்தாலும் எதிர்கொண்டு, தோல்வியை கடந்து நாம் செயல்பட வேண்டும். மன உளைச்சலில் இருந்தால் கட்டாயம் அதில் இருந்து விடுபட தேவையான முயற்சியில் ஈடுபட வேண்டும். மன அழுத்தம் நீடிக்கும் பட்சத்தில் உறக்கமின்மை, இரத்த அழுத்தம் அதிகரிக்கும்.
சிரிப்பே மருந்து என்பதை போல நாம் கட்டாயம் சிரிக்க வேண்டும். அவை நமது மனதை புத்துணர்ச்சியாக்க உதவி செய்யும். உடற்பயிற்சி, தியானம், இசை, சினிமா, விளையாட்டு போன்றவற்றில் ஈடுபட்டு 8 மணிநேரம் உறங்க வேண்டும். இவை மன அழுத்தத்தை குறைக்க உதவி செய்யும். எதனையும் புன்னகையோடு எதிர்கொள்ள வேண்டும்.