Sony Bravia SmartTv: அதிநவீன அம்சங்களுடன் களமிறங்கி, இந்தியாவில் கலக்கி வரும் சோனி 42 இன்ச் டிவி... சிறப்பம்சங்கள் என்னென்ன?..!
சீன நிறுவனங்கள் தங்களுக்கு என பல தொலைக்காட்சிகளை அறிமுகம் செய்து வந்தாலும், சோனிக்கு இருக்கும் தனிமதிப்பு அன்று முதல் இன்று வரை தொடர்ந்து வருகிறது.
டிசம்பர், 9: சீன நிறுவனங்களின் சியோமி (Xiaomi) நிறுவனத்திற்கு ஈடுகொடுக்கும் வகையில், அதிநவீன சாராம்சங்கள் கொண்ட ஸ்மார்ட் டிவியை ஜப்பானிய நிறுவனமான சோனி (Sony) அறிமுகம் செய்து வருகிறது.
என்னதான் சீன நிறுவனங்கள் தங்களுக்கு என பல தொலைக்காட்சிகளை அறிமுகம் செய்து வந்தாலும், சோனிக்கு இருக்கும் தனிமதிப்பு அன்று முதல் இன்று வரை தொடர்ந்து வருகிறது.
ஒருவீட்டை முழுவதுமாக தியேட்டராக மாற்றும் திறன் கொண்ட சோனி, தற்போது 43 இன்ச் அளவு கொண்ட Sony Bravia Smart Hd 2022 TV-ஐ இந்தியாவில் அறிமுகம் செய்திருந்தது. இந்த டிவிக்கு இந்தியாவில் ஏகபோக வரவேற்பு கிடைத்துள்ளது. Lord Ayyappa: தொடங்குகிறது கார்த்திகை.. ஐயப்பன் கோவில் மாலை அணிவிப்போர் மேற்கொள்ளும் விரத முறைகள் என்ன?..!
வீட்டிற்கு ஸ்மார்ட் டிவி வாங்க வேண்டும் என்று எண்ணுபவர்கள் அனைவரும் சோனியையே தேர்ந்தெடுத்து வருகின்றனர். புல் எச்.டி & எல்.இ.டி அமைப்புடன் 1920 X 1080 பிக்சலுடன், 60 ஹெர்ட்ஸ் ரீ-பிரஷ் தன்மையுடன் அட்டகாசமாக களமிறங்கியுள்ள சோனி ஸ்மார்ட் டிவி Dolby Audio & Alexa இணக்கத்தன்மை கொண்டுள்ளது.
இதனால் சோனி டிவி நல்ல ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது. அதனைப்போல, வாய்ஸ் செர்ச், கூகுள் டிவி, நெட்பிளிக்ஸ், அமேசான், ஆப்பிள் ஹோம், ஜீ5, வூட், ஹாட்ஸ்டார் என பல தரவுகளில் இருந்தும் விடியோவை கண்டுகளிக்கலாம்.
3 HDMI போர்ட், 2 USB போர்ட், வை-பை, ஈதர்நெட் கனெக்டிவிட்டி போன்ற அம்சங்கள் இந்த மாடலில் உள்ளது. இதன் எடை 7.7 கிலோ ஆகும். SONY Bravia Smart HD 2022 TV இந்தியாவில் ரூ.42,740 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை அமேசான் தளத்தில் எக்ஸெஜ், இ.எம்.ஐ, மொத்த தொகை கொடுத்தும் வாங்கலாம்.