Balasore Train Accident: 292 பேரை பலிகொண்ட ஒடிஷா இரயில் விபத்து; தென்கிழக்கு இரயில்வே பொதுமேலாளர் மாற்றம்.!

ஒடிசாவில் 292 பேரை பலிகொண்ட கோர இரயில் விபத்து நடந்து மாதம் ஆகிவிட்ட நிலையில், சி.பி.ஐ விசாரணையும் நடந்து வருகிறது. தற்போது தென்கிழக்கு இரயில்வேயின் பொதுமேலாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Balasore Train Accident (Photo Credit: ANI Twitter)

ஜூலை 01, கொல்கத்தா (Kolkata): ஒடிஷா மாநிலத்தில் உள்ள பாலசோர் பகுதியில் கடந்த ஜூன் 2ம் தேதி நடந்த பயங்கர இரயில் விபத்தில், 2 பயணிகள் இரயில் மற்றும் சரக்கு இரயில் மோதிக்கொண்டது.

இந்தியாவையே மீண்டும் அதிர்ச்சியாக்கிய பாலசோர் இரயில் விபத்தில் 292 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சிலரின் உடல் இன்று வரை கண்டறிய வாய்ப்பில்லாமல் டி.என்.ஏ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. Delhi Rape: 16 வயது சிறுமி 68 வயது முதியவரால் பாலியல் பலாத்காரம்; 10 நாட்கள் நடந்த கொடுமை.. அம்பலப்படுத்திய சி.சி.டி.வி கேமிரா பதிவு.!

Coromandel Express Train Accident Visuals from Spot - Pic Taken on Accident Day June 02, 2023 08:00 PM (Photo Credit: Twitter)

மாயமானதாக கருதப்படும் நபர்களின் உறவினர்கள் ஒடிஷாவிலேயே கண்ணீருடன் தங்களது குடும்ப நபரின் உடலை பெற காத்திருக்கின்றனர். இந்த விஷயம் தொடர்பாக இரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவின் வேண்டுகோளுக்கு ஏற்ப சி.பி.ஐ விசாரணை நடந்து வருகிறது.

இந்த நிலையில், தென்கிழக்கு இரயில்வேயின் பொது மேலாளர் அர்ச்சனா ஜோஷி பதவியில் இருந்து அகற்றப்பட்டு, அணில் குமார் மிஸ்ரா புதிய பொது மேலாளராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.

ஒடிஷா இரயில் விபத்து கடந்த 30 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவில் நடந்த மிகப்பெரிய கோர விபத்து ஆகும்.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now

Share Now