Accused Arrested: காவல்நிலையத்தில் வேனுக்கு தீ வைப்பு.. தப்பியோட முயன்ற குற்றவாளி கைது..!
கேரளாவில் காவல்நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேனுக்கு தீ வைத்து தப்பியோட முயன்ற குற்றவாளி கைது செய்யப்பட்டார்.
நவம்பர் 29, பாலக்காடு (Kerala News): கேரள மாநிலம், பாலக்காடு (Palakkad) மாவட்டத்தில் உள்ள சுள்ளிமடை பகுதியை சேர்ந்தவர் பவுல்ராஜ் (வயது 50). இவர், குடிபோதையில் அடிதடியில் ஈடுபட்ட வழக்கில், வாளையார் காவல்துறையினர் நேற்று முன்தினம் (நவம்பர் 27) மாலை கைது செய்து விசாரித்த பின் ஜாமினில் அவரை விடுவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவர், இரவு 8:30 மணிக்கு காவல்நிலையம் அருகே நிறுத்தி வைத்திருந்த வேன் (Van) மீது, பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். இதில், வேன் கொளுந்து விட்டு எரிந்தது. Chain Snatching: கணவருடன் சென்ற கர்ப்பிணியிடம் இருந்து செயின் பறிப்பு.. பைக்கில் இருந்து விழுந்த தம்பதி.. அதிர்ச்சிகர வீடியோ உள்ளே..!
உடனே வாகனம் எரிந்து கரும்புகை கிளம்பியதை கண்டு ஓடி வந்த காவல்துறையினர், அங்கிருந்த தப்ப முயன்ற பவுல்ராஜை மடக்கிப் பிடித்தனர். இதுகுறித்து, தகவலறிந்து வந்த தீயணைப்பு படையினர் வேனில் பற்றிய தீயை அணைத்ததால், மற்ற வாகனங்களுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. இதனையடுத்து, காவல்துறை அதிகாரிகளின் பணிக்கு இடையூறு விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில், பவுல்ராஜ் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். மேலும், அவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.