Chain Snatching (Photo Credit: Facebook)

நவம்பர் 29, புதுச்சேரி (Puducherry News): புதுச்சேரியில் உள்ள 45 அடி சாலை பகுதியில், கடந்த நவ.24 அன்று இரவு 10:50 மணியளவில், இருசக்கர வாகனத்தில் பொறுமையாக சென்ற தம்பதியை, வாகனத்தில் இருந்தவாறு இளைஞர் செயினை பறித்துச் சென்றார். இதனால் நிலைதடுமாறிய இருவரும் கீழே விழுந்து விபத்திற்குள்ளானர். வாகனத்தில் இருந்த பெண் கர்ப்பிணி ஆவார். இந்த நிலையில், அவர்கள் உடனடியாக பிற பொதுமக்களால் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். Man Kills Live-In Partner: 40 துண்டுகளாக வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட பெண்; காதலனால் நேர்ந்த கொடூரம்..!

இந்த காட்சிகள் கண்காணிப்பு கேமராவில் பதிவான நிலையில் சமூக வலைதளங்களில் வைரலானது. மேலும், இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செயின் பறிப்பு குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் நபர்களுக்கு கடுமையான தண்டனை விதிப்பதே பல உயிர்களை எதிர்காலத்தில் காப்பாற்றும்.

கர்ப்பிணியிடம் இருந்து செயின் பறிப்பு: