அணுஅணுவாய் சித்ரவதை.. 1 வயது குழந்தையை தவிக்கவிட்டு தாய் விபரீதம்.. பதறவைக்கும் மரண குறிப்பு.! பெண் தூக்கிட்டு தற்கொலை..!
தெலுங்கானாவில் கணவர் தொல்லை தாங்கமுடியாமல், மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஏப்ரல் 25, ஜக்தியால் (Telangana News): தெலுங்கானா மாநிலம், ஜக்தியால் (Jagtial) மாவட்டத்தில் உள்ள போச்சம்மாவாடாவைச் சேர்ந்தவர் லட்சுமி பிரசன்னா (வயது 29). இவர், வெல்கடூர் மண்டலத்தில் உள்ள ராம்னூர் கிராமத்தைச் சேர்ந்த திருப்பதி என்பவரை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் பெங்களூரில் மென்பொருள் பொறியாளர்களாக பணிபுரிந்து வந்தனர். இத்தம்பதிக்கு, ஒரு ஆண்டுக்கு முன்பு ஒரு மகன் பிறந்தார். Altaf Lalli: பயங்கரவாதி சுட்டுக்கொலை.. அதிரடி காட்டிய இந்திய ராணுவம்..!
கொடுமைப்படுத்திய கணவர்:
இதனிடையே, லட்சுமி பிரசன்னா வெள்ளை நிறத்தில் இருந்ததால், தனது மகன் வெள்ளை நிறமாகவும், அழகாகவும் பிறப்பான் என்று சந்தேகித்த அவரது கணவர் திருப்பதி, தனது மனைவியைத் தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார். இதன்காரணமாக, லட்சுமி பிரசன்னா தனது வேலையை விட்டுவிட்டு வீட்டில் இருந்துள்ளார். மேலும், வரதட்சணைக்காக முழுத் தொகையும் தனக்கு வழங்கப்படவில்லை என்று கூறி, மாமியார் அவரைத் துன்புறுத்தியுள்ளார். இதனால் மிகுந்த மனவேதனையடைந்த அவர், கடந்த 5 நாட்களுக்கு முன்பு ஜகித்யாலில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்தார்.
பெண் தூக்கிட்டு தற்கொலை:
அப்போது, வீட்டில் உள்ள கண்ணாடியில், "அம்மா, அப்பா, நான் வாழ விரும்பவில்லை. கவனமாக இரு மகனே. தயவுசெய்து என் மகனை அவர்களிடம் கொடுத்துவிடாதீர்கள்" என்று எழுதியுள்ளார். பின்னர், மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை (Hanging Suicide) செய்துகொண்டார். இதனையடுத்து, பெண்ணின் தந்தை, தனது மகளின் மரணத்திற்கு அவரது கணவர் மற்றும் மாமியார் தான் காரணம் என்று காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து திருப்பதி மற்றும் அவரது பெற்றோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)