PM Distribute 51,000 Appointment Letters: 51 ஆயிரம் பணியாளர்களுக்கு பணி நியமன கடிதங்களை வழங்கினார் பிரதமர் மோடி; அசத்தல் நிகழ்வு இதோ.!

வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கு முன்னுரிமை அளிப்பதற்கான பிரதமரின் உறுதிப்பாட்டை நிறைவேற்றும் படியாக வேலைவாய்ப்பு மேளா உள்ளது. வேலைவாய்ப்பு மேளாவின் கீழ் அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்களில் புதிதாக சேர்க்கப்பட்ட 51,000 க்கும் மேற்பட்டோருக்கு நியமனக் கடிதங்களை ஆகஸ்ட் 28 அன்று பிரதமர் வழங்கினார்.

PM Narendra Modi Rozgar Mela Meeting 28 Aug 2023 (Photo Credit: Twitter)

ஆகஸ்ட் 28 , புதுடெல்லி (New Delhi): பிரதமர் நரேந்திர மோடி 28 ஆகஸ்ட் 2023 அன்று காலை 10:30 மணிக்கு காணொலி மூலம் புதிதாக பணியில் சேர தேர்வான 51,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கினார். இந்நிகழ்வில் பிரதமர் மோடி உரையாற்றியும் இருந்தார்.

நாடு முழுவதும் 45 இடங்களில் வேலைவாய்ப்பு மேளா நடைபெற உள்ளது. இந்த நிகழ்வின் மூலம் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎப்), எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்), சஷஸ்திரா சீமா பால் (எஸ்எஸ்பி), அசாம் ரைபிள்ஸ், மத்திய தொழிலக பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்), இந்தோ திபெத் எல்லைக் காவல் படை (ஐடிபிபி) மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (என்சிபி) மற்றும் தில்லி காவல்துறை போன்ற பல்வேறு மத்திய ஆயுத போலீஸ் படைகளில் (சிஏபிஎஃப்) பணியாளர்களை உள்துறை அமைச்சகம் நியமிக்கிறது.

நாடு முழுவதிலுமிருந்து தேர்ந்தெடுக்கப்படும் இவர்கள், உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள பல்வேறு நிறுவனங்களில் கான்ஸ்டபிள் (பொதுப்பணி), சப்-இன்ஸ்பெக்டர் (பொதுப்பணி) மற்றும் பொதுப்பணி அல்லாத கேடர் பதவிகள் போன்ற பல்வேறு பதவிகளில் சேருவார்கள். Heart Attack Death: “நொடியில் பறிபோன உயிர்” – நண்பர்களுடன் ஆசையாக படம்பார்த்தவருக்கு நேர்ந்த சோகம்.. பகீர் வீடியோ உள்ளே.! 

சி.ஏ.பி.எஃப் மற்றும் தில்லி காவல்துறையை வலுப்படுத்துவது, உள்நாட்டு பாதுகாப்புக்கு உதவுவது, பயங்கரவாத எதிர்ப்பு, கிளர்ச்சியை எதிர்த்துப் போராடுவது, இடதுசாரி தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை மற்றும் நாட்டின் எல்லைகளைப் பாதுகாப்பது போன்ற பல பரிமாண பங்கை மிகவும் திறம்பட செய்ய இந்த படைகளுக்கு வேலைவாய்ப்பு உதவும்.

வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கு அதிக முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற பிரதமரின் உறுதிப்பாட்டை நிறைவேற்றுவதற்கான ஒரு படிதான் வேலைவாய்ப்பு மேளா. மேலும், வேலைவாய்ப்பை உருவாக்குவதில் ஒரு உத்வேகமாக செயல்படும் என்றும், இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் தேசிய வளர்ச்சியில் பங்கேற்பதற்கான அர்த்தமுள்ள வாய்ப்புகளை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிதாக நியமிக்கப்பட்டவர்கள் ஐ.ஜி.ஓ.டி கர்மயோகி போர்ட்டலில் உள்ள ஆன்லைன் தொகுதியான கர்மயோகி பிராரம்ப் மூலம் தங்களைப் பயிற்றுவிக்கும் வாய்ப்பைப் பெறுகிறார்கள். அங்கு 673 க்கும் மேற்பட்ட மின் கற்றல் படிப்புகள் 'எங்கும் எந்த சாதனமும்' கற்றல் வடிவத்திற்கு கிடைக்கின்றன.

(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)

Share Now
Advertisement


Advertisement
Advertisement
Share Now
Advertisement