US Citizens: இந்தியா செல்லும் அமெரிக்கர்கள் இங்கெல்லாம் செல்லவேண்டாம்.. எச்சரிக்கை கொடுத்த அமெரிக்கா., என்ன விஷயம் தெரியுமா?.!
இந்தியாவிற்கு சுற்றுலா வரும் நபர்களுக்கு அந்தந்த நாட்டின் அரசு சார்பில் பயனர்களுக்கு பாதுகாப்பு கருதி பல அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.
டிசம்பர், 9: உலகளவில் உள்ள பல நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு (India) ஆண்டுக்கு கோடிக்கணக்கான வெளிநாட்டினர் மருத்துவ சிகிச்சை, சுற்றுலா (Medical Treatment & Tourist)என பல காரணங்களுக்காக வந்து செல்கின்றனர். இவர்கள் இந்தியாவிற்கு வந்து செல்ல அந்தந்த நாட்டின் அரசு சார்பில் பயனர்களுக்கு பாதுகாப்பு கருதி பல அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.
இதில், அமெரிக்க அரசு (America's US Govt) இந்தியாவிற்கு செல்லும் அமெரிக்கர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை தொடர்பான தரவுகள் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பதிவுகள் கடந்த மாதத்தில் அந்நாட்டு அரசால் புதுப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியா செல்லும் அமெரிக்கர்கள் அதிக எச்சரிக்கையுடன் செயல்படுங்கள் என கேட்டுக்கொண்டுள்ளது.
அதாவது, இந்தியாவில் நாளுக்கு நாள் குற்றங்கள் என்பது அதிகரித்து வருகிறது. குறிப்பாக பாலியல் பலாத்கார வழக்குகள் அதிகளவு தாக்கல் செய்யப்படுகின்றன. இது சுற்றுலாத்தலங்கள் மற்றும் அதற்கு அருகில் இருக்கும் நகரங்களிலும் நடக்கிறது. சுற்றுலாத்தலங்கள், போக்குவரத்து முனையங்கள், மார்க்கெட் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பயங்கரவாத தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளது.
மகாராஷ்டிராவின் கிழக்கு மாவட்டங்கள், தெலுங்கானாவின் வடக்கு மாவட்டங்கள், மேற்கு வங்கம் மாநிலத்தின் மேற்கு பகுதிகளுக்கு செல்ல திட்டமிட்டு இருந்தால், அதனை கவனத்துடன் செயல்படுத்த வேண்டும். அவசரகால வெளியேற்றம் அல்லது தப்பிக்கும் நடவடிக்கைக்கு எப்போதும் தயாராக இருக்க வேண்டும். கீழ்க்காணும் பகுதிகளுக்கு எக்காரணம் கொண்டும் செல்ல வேண்டாம். இதனை Level 4 குறிப்புக்கள் அமெரிக்க அரசு வரையறுத்து வைத்துள்ளது. Crypto BitCoin: பிட்காயினின் பயன்பாடு மக்களிடையே அதிகரித்தது எதனால்?.. உண்மையை அலசினால் காரணம் இது தான்.!
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் அபாயம் உள்ளது. அதனைப்போல லடாக்கில் கிழக்கு பகுதி, காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள ஸ்ரீநகர், குல்மார்க், பஹ ல்கம் போன்ற இடங்களுக்கு செல்ல வேண்டாம்.
இந்தியா - பாகிஸ்தான் எல்லை: இந்திய - பாகிஸ்தானிய எல்லை பகுதிகளில் இருநாட்டு அரசும் தங்களின் இராணுவ வலிமையை முழு கட்டமைப்புடன் அங்கு நிலைநிறுத்தி வைத்துள்ளது. ஆகையால், அட்டாரி - வாஹா எல்லைப்பகுதியை தவிர்த்து, பிற இந்தியா - பாகிஸ்தான் எல்லைப்பகுதி அருகே சென்று சுற்றுலாவை கண்டுகளிக்க வேண்டாம். குறிப்பாக இருநாட்டு எல்லைப்பகுதியில் 10 கி.மீ தூரம் முன்பு பயணிக்க வேண்டாம்.
வடகிழக்கு மாநிலங்கள்: இந்தியாவில் உள்ள வடகிழக்கு மாநிலங்களில் இன கிளர்ச்சி குழுக்கள் மூலமாக பல தாக்குதல் நடத்தப்படுகிறது. குறிப்பாக பேருந்துகள், இரயில்கள், மார்கெட்டுகள் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. ஆதலால் அசாம், அருணாச்சல பிரதேசம், மிசோரம், நாகலாந்து, மேகாலயா, திரிபுரா, மணிப்பூர் போன்ற மாநிலங்களுக்கு கொல்கத்தாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் அனுமதியின்றி செல்ல வேண்டாம்.
மத்திய கிழக்கு மாநிலங்கள்: இந்தியாவில் இருக்கும் மத்திய கிழக்கு மாநிலங்கள், கிழக்கு மகாராஷ்டிரா பகுதிகள், வடக்கு தெலுங்கானா மாநில பகுதிகள், மேற்கு வங்கத்தின் மேற்கு பகுதிகள், சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்டின் எல்லைப்பகுதிகள், மத்திய பிரதேசம், பிகார், ஒடிசா மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் இருக்கிறது. அவர்கள் அரசு பாதுகாப்பு படை மீது திடீர் தாக்குதல் நடத்துகிறார்கள்.
ஆகையால், அமெரிக்க மக்கள் அங்கு செல்ல வேண்டாம். மேற்கூறியுள்ள மாநிலங்களின் தலைநகருக்கு செல்ல எந்த பிரச்சனையும் இல்லை. அம்மாநிலங்களில் இருக்கும் பிற இடங்களுக்கு அமெரிக்க தூதரக அதிகாரியின் அனுமதி இன்றி செல்லும் முயற்சியை எடுக்க வேண்டாம்.