US Ambassador Eric Garcetti: வாழை இலையில் உணவை ருசித்து சாப்பிட்ட இந்தியாவுக்கான அமெரிக்க தூதர்; சென்னை வருவதாக மகிழ்ச்சியுடன் அறிவிப்பு.!

சென்னை மண் மீது பிரியம் கொண்ட அமெரிக்க தூதர் எரிக், இன்று டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் உணவு சாப்பிட்டு மகிழ்ந்து, சென்னை வருகிறேன் என தித்திப்பு அறிவிப்பையும் வெளியிட்டு இருக்கிறார்.

US Amb India Eric Garcetti (Photo Credit: Twitter)

ஜூன் 14, தமிழ்நாடு இல்லம் - டெல்லி (New Delhi): இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக (US Ambassador India) கடந்த மே 25ம் தேதி எரிக் கார்செட்டி (Eric Garcetti) நியமனம் செய்யப்பட்டார். தற்போது டெல்லியில் அமெரிக்காவுக்கான புதிய தூதரகம் (American Embassy India) அமைக்கப்பட்டு வரும் நிலையில், அங்கு நடக்கும் வேலைகளை நேரில் பார்வையிட்டு சிறப்பம்சங்களை கேட்டறிந்த எரிக், அங்கு பணியாற்றும் இந்திய கட்டுமான தொழிலாளர்களிடையே உரையாற்றினார். பாதுகாப்பாக பணிகளை செய்யவும் கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில், தற்போது அவர் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திற்கு (Delhi Tamilnadu House) இன்று வருகை தந்த எரிக், அங்கு வாழை இலையில் (South Indian Food) உணவு சாப்பிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மேலும், தென்னந்திய உணவுகள் தன்னை மிகவும் கவருகிறது, விரைவில் நான் சென்னைக்கு (Chennai) வருகிறேன் எனவும் கேட்டுக்கொண்டார்.

டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கியிருந்த இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக், அங்கு வாழை இலையில் உணவு சாப்பிட்டு, அங்கிருந்த தமிழ் மக்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"நான் ஒரு வாழை இலையில் தென்னிந்திய அடையாள சின்னமான வாழை இலை உணவை சாப்பிட்டேன். இந்த சுவையான தென்னிந்திய உணவுகளின் சுவை மற்றும் அதன் சிறப்பம்சத்தால், சிக்கலான தன்மையால் (காரசாரமான உணவுகள் குறித்து கூறுகிறார்) நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். சென்னைக்காக என் இதயம் இருக்கிறது, விரைவில் உங்களைப் பார்க்க ஆவலாக உள்ளேன்" என்று தெரிவித்தார்.