Joe Biden on India: "உலகிலேயே அமெரிக்காவுக்கு முக்கியமான நாடு இந்தியா" - இந்தியாவுக்கான அமெரிக்கா தூதரிடம் உரையாடிய ஜோ பைடன்.!
அமெரிக்க அதிபர் ஜோ பைதனிடம், அமெரிக்காவுக்கான இந்திய தூதர் எரிக் உரையாற்றியபோது இந்தியா குறித்து அதிபர் பெருமையாக தெரிவித்த கருத்துக்களை இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் இன்று பகிர்ந்துகொண்டார்.
ஆகஸ்ட் 23, புதுடெல்லி (NewDelhi): இந்தியாவுக்கான அமெரிக்க தூதரக பொறுப்பேற்ற எரிக் கார்செட்டி (Eric Garcetti), இந்தியாவில் உள்ள மாநிலங்களில் சிறப்பு விருந்தை பெற்று, மக்களிடம் உரையாற்றினார். அவர் தமிழகத்திற்கு வருகைதருவதை முன்பிருந்து எதிர்பார்த்ததாகவும் குறிப்பிட்டு இருந்தார். எரிக் இந்தியாவில் (India) அமெரிக்காவுக்கான (America) இந்திய தூதரக பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைந்துவிட்டன.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ (Joe Biden) பைதனிடம், எரிக் உரையாற்றியபோது இந்தியா குறித்து அதிபர் பெருமையாக தெரிவித்த கருத்துக்களை இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் இன்று பகிர்ந்துகொண்டார்.
அமெரிக்க அதிபர் ஜோ பிடன், அமெரிக்காவுக்கான இந்திய தூதர் (America Ambassador) எரிக்கிடம் பேசும்போது, "உலகிலேயே இந்தியா மிக முக்கியமான நாடு. குறிப்பாக தனக்கு மிக முக்கியமான நாடு. இரண்டு நாடுகளின் (US India Friendship) வரலாற்றில் எந்த அமெரிக்க அதிபரும் சொல்லாததை நான் கூறவிரும்புகிறேன். அமெரிக்காவில் வரிசெலுத்தும் அமெரிக்காவாழ் இந்தியர்களின் விழுக்காடு 6% ஆகும். Pragnanandha enters Final: உலகக் கோப்பை செஸ் தொடரின் இறுதிச்சுற்றில் அடியெடுத்து வைக்கிறார் பிரக்ஞானந்தா: குவியும் தலைவர்களின் வாழ்த்துக்கள்.!
தொழில்நுட்பம், வர்த்தகம், சுற்றுசூழல், பெண்களுக்கு அதிகாரம் வழங்குவது என சிறு தொழில்களில் இருந்து விண்வெளி வரியிலும் வானமே எல்லை என கூறி, விண்வெளியில் ஒன்றாக செயல்படுகிறோம். கடற்பரப்பிலும், வானத்திலும் இராணுவ பயிர்ச்சி மேற்கொள்கிறோம். அமெரிக்கா-இந்தியா நன்மைக்கான சக்தி. இவை உலகத்தை முன்னோக்கி நகர்த்தும்" என அதிபர் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய எரிக் கார்செட்டி, "நான் எனது இளமைப்பருவத்தில் இந்தியாவுக்கு வந்து பௌத்தம் தொடர்பான ஆய்வுகளை செய்ய்ய விரும்பினேன். ஆனால், அன்றைய சூழலில் என்னால் இங்கு வந்தாலும், ஆய்வுகளை மேற்கொள்ள இயலாத சூழல் ஏற்பட்டது. எனது கனவுகள் சிதைந்தன. ஆனால், இன்று நான் விரும்பிய இந்தியாவில் இருக்கிறேன். கனவுகளை மெய்ப்பிக்க முயற்சிக்கிறேன்" என பேசினார்.