Adhir Ranjan Chowdhury Controversial Remarks On PM Modi: பிரதமரை தரக்குறைவாக விமர்சித்த மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர்.. கொந்தளிக்கும் பாஜக தொண்டர்கள்..!
இதற்கு பலதரப்பிலும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
மே 24, கொல்கத்தா (Kolkata News): கடந்த 2016ம் ஆண்டு புழக்கத்தில் இருந்த பழைய ரூபாய் நோட்டுகளான ரூ.500, ரூ.1,000 ஆகியவை செல்லாது (2016 Indian Banknote Demonetisation) என அறிவிக்கப்பட்டு, அதற்கு பதிலாக ரூ.2,000 புதிய ரூ.500, ரூ.100 & ரூ.200 ஆகிய நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. பிரதமர் நரேந்திர மோடியின் (Narendra Modi) தலைமைலயிலான அரசு (Central Govt) மேற்கொண்ட இம்முடிவு உலகளவில் கவனிக்கப்பட்டது, பாராட்டப்பட்டது.
இதனிடையே, பழைய ரூபாய் நோட்டுகளின் ஒழிப்பால் எழும் பொருளாதார பிரச்சனையை சரி செய்ய அறிமுகம் செய்யப்பட்ட ரூ.2000 நோட்டுகள் உற்பத்தி 2018ல் நிறுத்தம் செய்யப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுகள் காலாவதியானதாக அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்ட மத்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank Of India), வங்கிகளில் ரூ. 2 ஆயிரம் நோட்டுகளை நாளொன்றுக்கு ரூ.20 ஆயிரம் வரையில் தனிநபர் செப்டம்பர் 30-க்குள் மாற்றிக்கொள்ள அறிவுறுத்தி அறிவிப்புகளை வெளியிட்டது. மத்திய அரசின் இந்த முடிவு எதிர்கட்சிகளால் விமர்சனத்திற்குள்ளாக்கப்பட்டு வருகின்றன.
அதுமட்டுமல்லாது, மத்திய அரசு ரூ.2000 நோட்டுகள் தடை செய்யப்பட்டது குறித்த விளக்கத்தை தனது பாஜக கட்சி நிர்வாகிகள் மூலமாக எடுத்துரைத்து வந்தாலும், எதிர்க்கட்சிகள் அதனை விவாதப்பொருளாக்கியுள்ளது. இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் பிரதமரை அவதூறான வார்த்தையால் தரக்குறைவாக விமர்சித்த சம்பவம் நடந்துள்ளது.
மேற்கு வங்கம் மாநில காங்கிரஸ் (West Bangal Congress President) தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆதிர் ரஞ்சன் சவுதாரி (Adhir Ranjan Chowdhury) முர்ஷிதாபாத் நகரில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசுகையில், "அவர் நரேந்திர மோடி இல்லை. மக்கள் அவரை பகலா (பைத்தியம்) மோடி என்று அழைக்கிறார்கள்" என்று கூறினார். மேற்படி பேசிய அவர், மேற்கு வங்கம் முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவத் மான் ஆகியோரையும் விமரசித்தார்.
ஏனெனில் எதிர்வரும் தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சி அணி திரளவேண்டும் என அக்கட்சியின் தலைமை முடிவெடுத்து மாநிலம் மாநிலமாக ராகுல் காந்தியின் நடைப்பயணத்தை நடத்தி முடித்த நிலையில், ஆம் ஆத்மீ மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து மூன்றாவது அணியை ஏற்படுத்தலாம் என்ற நிலைமையும் ஏற்பட்டுள்ளது.
ஆதிர் தொடர்ந்து பேசுகையில், "கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களை வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து இருந்தாலும், அவர்களின் வாக்கு வங்கியை ஆம் ஆத்மீ சில விழுக்காடுகள் அளவு குறைக்க காரணமாக இருந்தது" எனவும் கூறினார். அதேபோல, மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மம்தா தலைமையிலான ஆட்சி நடைபெறுகிறது.
இவ்வாறான அரசியல் சூழ்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஆதிர் ரஞ்சன் இந்திய பிரதமருக்கு எதிராக சர்ச்சைக்குரிய வார்த்தையோடு, அவதூறாக தனது கருத்துக்களை முன்வைத்து இருப்பது தேசிய அளவிலான பாஜக தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆதிரின் சர்ச்சைக்குரிய பேச்சு குறிப்புள்ள வீடியோ