Shocking Video: கெமிக்களில் சேர்த்ததும் புதிதாக அறுவடை செய்யப்பட்டதை போல உயிர்த்தெழுந்த கீரை.. பகீர் வீடியோ வைரல்.!
உண்ணும் உணவுதான் மருந்து என்ற நிலை என்றோ மாறி, உணவுகளில் வேதிப்பொருட்கள் கலப்பது பல நிலைகளில் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்த பகீர் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.
மார்ச் 21: நாம் இன்றளவில் சாப்பிடும் உணவுகள் விளைவிக்கப்படும்போது பூச்சி தாக்குதலில் இருந்து பாதுகாக்க குறிப்பிட்ட அளவிலான வேதிப்பொருட்கள் (Chemicals on Food) உபயோகம் செய்யப்படுகின்றன. முந்தைய காலங்களில் இயற்கை உரங்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில், மாறிவந்த விரைவு உணவுப்பொருட்கள் உற்பத்தி காரணமாக பல மாறுதல்கள் விவசாயத்திலும் புகுத்தப்பட்டது.
சந்தைகளில் உணவுப்பொருட்கள் பார்க்க பளபளவென இருக்க பல ரசாயனங்கள் சட்டவிரோத கும்பலால் உபயோகம் செய்யப்படுகிறது. இதனை கண்காணித்து தடுக்க உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில், வாடிப்போன கீரை கெமிக்களில் நனைத்து எடுக்கப்பட்ட பின்னர், அது புதுமையாக பறிக்கப்பட்டதை போல இருக்கிறது. Edappadi Palanisamy About Agri Budget: விவசாயிகளை ஏமாற்றும் வேளாண்துறை அறிவிப்புகள்; வேளாண் பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சி தலைவர் விமர்சனம்.!
இதுகுறித்த அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ள நிலையில், அது உண்மையில் இரசாயனமா? அங்கு நடப்பது என்ன? உட்பட பிற விபரங்கள் குறித்த தகவல் இல்லை. அவை குறித்து விசாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த விடியோவை கண்டு அதிர்ச்சியடைந்துள்ள நெட்டிசன்கள், கீரைகளை எப்படி இப்படி புதுமையாக்க முடிகிறது என வியந்து பதைபதைப்போடு பல கேள்விகளை முன்வைத்து வருகின்றனர்.