Wicket Keeping: உலகளவில் எம்.எஸ் தோனியை போல கவனிக்கத்தக்க இடத்தை பெற்ற விக்கெட் கீப்பர்கள் யார் யார்?.. விபரம் இதோ.!
அவர் விக்கெட் கீப்பிங் செய்கிறார் என்றால் பேட்டர் கொஞ்சம் கவனமாகத்தான் செயல்பட வேண்டும் என்று உலகளாவிய கிரிக்கெட் ரசிகர்களும், பேட்டிங் ஜாம்பவான்களும் தெரிவிப்பார்கள்.
டிசம்பர், 10: கிரிக்கெட்டில் (Cricket) நாம் பேட்டிங், பவுலிங் என்று அந்தந்த வீரர்களின் திறமைக்கேற்ப அவர்களின் ரசிகர்களாக இருப்போம். இதில், பவுலர் வீசும் பந்து பேட்டிங் செய்யும் நபரை தாண்டி அல்லது அவரது பேட்டில் பட்டு பின்புறம் செல்லும் போது, அப்பந்தை எதிர்நோக்கி காத்திருக்கும் விக்கெட் கீப்பரை (Wicket Keeper) யாராலும் மறக்க முடியாதது.
ஏனெனில், உலகளவில் விக்கெட் கீப்பருக்கான இடத்தில் மின்னலை போல ஜொலித்தவர் எம்.எஸ் தோனி. அவர் விக்கெட் கீப்பிங் செய்கிறார் என்றால் பேட்டர் கொஞ்சம் கவனமாகத்தான் செயல்பட வேண்டும் என்று உலகளாவிய கிரிக்கெட் ரசிகர்களும், பேட்டிங் ஜாம்பவான்களும் தெரிவிப்பார்கள். இவ்வாறாக உலகளவில் சிறந்த விக்கெட் கீப்பர்கள் யார்? என்பது குறித்த தகவலை இன்று காணலாம்.
மார்க் பவுன்சர், தென்னாபிரிக்கா (Mark Bouncer): 467 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள தென்னாபிரிக்க அணியின் மார்க் பவுன்சர், 46 ஸ்டெம்பிங் சரியாக செய்துள்ளார். 952 கேட்ச்கள் பிடித்துள்ளார். இவர் விக்கெட் கீப்பிங்கில் கவனிக்கத்தக்க நபராவார்.
ஆடம் கில்க்ரிஸ்ட், ஆஸ்திரேலியா (Adam Gilchrist): 396 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள ஆஸ்திரேலிய அணியின் வீரர் ஆடம் கில்கிரிஸ்ட், 92 ஸ்டெம்பிங் செய்துள்ளார். 813 கேட்ச்கள் பிடித்துள்ளார். இவர் விக்கெட் கீப்பிங்கில் கவனிக்கத்தக்க நபராவார். Cold Water Bath: குளிர்ந்த நீரில் குளிப்பதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?.. ஆனால் அந்த ஒரு விஷயத்தில் கவனம்…!
எம்.எஸ் தோனி, இந்தியா (MS Dhoni, India): 538 போட்டிகளில் விளையாடி உலகளவில் விக்கெட் கீப்பிங்கில் மின்னல் செயல்முறைக்காரர் என்ற பெருமிதத்தை கொண்டவர் தல தோனி. விக்கெட் கீப்பிங் ஸ்டெம்பிங் விஷயங்களில் 195 ஸ்டெம்பிங் பெற்று முதல் இடத்தில் இருப்பவர் இவர் தான். மேலும், 539 கேட்ச்களும் பிடித்துள்ளார்.
குமார் சங்கக்காரா, இலங்கை (Kumar Sangakkara): 594 போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் குமார் சங்கக்காரா 139 முறை ஸ்டெம்பிங் செய்துள்ளார். 539 கேட்ச்கள் பிடித்துள்ளார். இவர் உலகளவில் விக்கெட் கீப்பிங்கில் கவனிக்கப்படும் வீரர்களில் ஒருவராவார்.
இலன் ஹீலி, ஆஸ்திரேலியா (Ian Healy): 287 போட்டிகளில் விளையாடியுள்ள ஆஸ்திரேலிய அணியின் வீரர் இலன் ஹீலி, 68 ஸ்டெம்பிங் செய்துள்ளார். 560 கேட்ச்களை பிடித்துள்ளார்.
இவர்களின் வரிசையில் தென்னாபிரிக்க அணியின் வீரர் குய்ன்டன் டி காக், ஆஸ்திரேலியாவின் ரோப் மார்ஷ், பிராட் குதின், மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜெப் துஜான், டேனிஷ் ராம்டின் ஆகியோரும் இருக்கின்றனர்.