International Yoga Day: சர்வதேச யோகா தினம் 2024; யோகாவின் ஆரோக்கிய நன்மைகள்.. உடலும்-மனமும் ஒருசேர கொண்டாடுங்கள்.!
உடலும் - மனமும் நலம்பெற கட்டாயம் நாம் உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். அந்த வகையில், உலகுக்கே யோகா என்ற கலையை எடுத்துரைத்த இந்தியா, உலகளவில் அதனை 10 ஆண்டுகளுக்கு முன்பு அங்கீகாரப்படுத்தியது. நாளைய தினத்தில் நடக்கவுள்ள முக்கிய நிகழ்வின் நன்மைகளை தெரிந்துகொண்டு, நீங்களும் அதில் பங்கேற்றுக்கொள்ளுங்கள்.
ஜூன் 20, புதுடெல்லி (New Delhi): சர்வதேச யோகா தினம், கடந்த 11 டிசம்பர் 2014 அன்று ஐக்கிய நாடுகள் (United National Organization) சபையினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21ம் தேதி உலகளவில் யோகா தினம் சிறப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. கடந்த 2014ம் ஆண்டு மத்தியில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு, பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பேற்ற பின்னர் உலகளவில் கிடைத்த முக்கிய அங்கீகாரமாக யோகா தினம் (International Yoga Day 2024) கவனிக்கப்பட்டது. உலகளவில் ஒவ்வொரு நாளும், வாரமும் பல்வேறு விஷயங்கள் நடைபெறும். அவை கவலையையும் தரும். எந்த சூழ்நிலையாக இருந்தாலும் பிரச்சனைகளில் இருந்து தீர்வுகாண, அரசியல் விருப்பத்தையும் வளங்களையும் நிலைநாட்ட, மனிதகுலத்தின் சாதனைகளை கொண்டாட, அக்கட்டமைப்புகளை வலுப்படுத்த ஐ.நா மன்றம் உறுதியாக இருக்கிறது. உலக நாடுகளும் ஐ.நா மன்றத்தின் பல ஆலோசனைகளை தங்களின் நாட்டில் செயல்படுத்தி ஆதரவாக இருக்கின்றனர்.
உடல்-மனம் நலம்பெற:
இந்தியாவை பொறுத்தமட்டில் யோகா என்பது பண்டைய காலத்தில் இருந்து உடல், மனம், ஆன்மிகம் சார்ந்த பயிற்சியாக இருந்துள்ளது. தற்போது இவை ஒவ்வொரு ஆண்டும் யோகா தினத்துடன் சேர்ந்து உலகளவில் கௌரவத்துடன் பின்பற்றப்படுகிறது. தனிபர்களுக்கும், சமூகத்திற்கும் ஆழ்ந்த நன்மைகள் சார்ந்த சிந்தனைகளை வழங்கும் யோகா, உடல் வலிமை மற்றும் நெகிழ்வு, சமநிலைக்கு உதவுகிறது, அதனை மேம்படுத்துகிறது. மனரீதியான அழுத்தம், பதற்றம், மனசோர்வு போன்ற பிரச்சனைகளை குறைகிறது. இதன் வாயிலாக மன ஆரோக்கியம் என்பது மேம்படும். வளமான யோகா சுய விழிப்புணர்வு, நினைவாற்றல் மேம்படும், மனதின் அக அமைதி ஆகியவற்றை தனித்துவமாக மேம்படுத்தி, சீரான மற்றும் இணக்கமான வாழ்க்கைக்கு வழிவகை செய்கிறது. TN Weather Update: தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலை பகுதிகளில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!
ஆரோக்கியம், நல்வாழ்வுக்கு முக்கியத்துவம் அளிக்கும் யோகா:
யோகாவினால் கிடைக்கும் ஆரோக்கியம் என்பது தனிநபரை மட்டுமல்லாது, ஆரோக்கியமான கலச்சாரத்தையும் ஊக்குவிக்கிறது. இதனால் மக்கள் ஒன்றிணைக்கப்பட்டு, சமூகத்தின் உணர்வுகள் பகிரப்பட்டு புதிய நல்வழி பிறகும். குழுக்களாக செய்யப்படும் யோகா சமூக பிணைப்பு மற்றும் பரஸ்பர ஆதரவை மேம்படுத்தும். கருணை, அகிம்சை வழி, ஒவ்வொரு உயிர்களுக்குமான மரியாதை போன்றவை யோகாவின் கொள்கை மற்றும் நடத்தை, சமூக நல்லிணக்கத்தை உறுதிசெய்து ஊக்குவிக்கிறது. சுய ஒழுக்கத்தின் முக்கியத்துவம், நினைவாற்றல் போன்றவை அதிக விழிப்புடன் நமது வாழ்க்கையை வாழ உதவி செய்யும். எதிர்மறை கருத்துக்கள் மற்றும் நடத்தைகள் குறைந்து நிலையான நடத்தை மாற்றம் ஏற்படும். தனிப்பட்ட நல்வாழ்வு மூலமும், அதனால் ஏற்படும் சமூக தொடர்புகளை ஆரோக்கியமாக வளர்ப்பதன் மூலமும், அமைதியான சமூகம் உண்டாகும். இந்திய பாரம்பரியத்தில் யோகா விலைமதிக்க இயலாத ஒன்று ஆகும். இது உடல், சிந்தனை, செயல் ஆகியவற்றை உள்ளடக்கி இருக்கிறது. மனிதனின் ஆரோக்கியம், நல்வாழ்வுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது.
தினசரி வாழ்வில் யோகா வேண்டும்:
யோகா என்பது பயிற்சியாக மட்டுமல்லாது, உலகுடனும்-இயற்கையுடனும் ஒற்றுமையான உணர்வுகளை கண்டறியும் வழிகள் ஆகும். மனவளர்ச்சி, உடல்வளர்ச்சி, உணர்ச்சி ஆகிய ஆரோக்கிய செயல்படும் யோகா கட்டாயம் அவசியம் ஆகும். உடல்ரீதியாக நெகிழ்வுத்தன்மை, வலிமை, சமநிலையை மேம்படுத்தவும் உதவுகிறது. நாட்பட்ட நோய்களின் அபாயத்தை குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, தலைசிறந்த தோரணை மற்றும் உடல் மறுசீரமைப்பை உண்டாக்குகிறது. இன்றளவில் பலருக்கும் மனரீதியாக ஏற்படும் மன அழுத்தத்தை குறைத்து, மனத்தெளிவை உண்டாக்க யோகா உதவி செய்யும். மூச்சுக்கட்டுப்பாடு வாயிலாக உணர்திறன் மேம்படும். தினசரி வாழ்வில் நாம் யோகா செய்வது உடல், மனம், உணர்வு ரீதியிலான பல பலன்களை வழங்கும். மனஅமைதி, பிரச்சனையை பொறுமையுடன் கையாளும் திறன் உட்பட பல நன்மைகள் நமக்கு பரிசாக கிடைக்கும். கவனச்சிதறல் இன்றி நாம் செயல்படும் சாதிய சூழல்கள் உண்டாகும். தினமும் காலை நேரங்களில் யோகாவுடன் அந்நாளை தொடங்குவது சிறப்பு மிகுந்த செயலாகும்.
ஒவ்வொரு ஆண்டும் யோகா தினத்தில் நண்பர்களுடன் யோகா செய்து மகிழ்வதோடு மட்டுமல்லாமல், தினமும் அதனை பின்பற்றுவது நன்மையை பயக்கும்.
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)